November 20, 2026

Seithi Saral

Tamil News Channel

அக்வான் புயல் ஒடிசாவில் கரையை கடந்தது- ஒரு லட்சம் பேர் வெளியேற்றம்

1 min read


Cyclone Asani makes landfall in Odisha – one lakh people evacuated

20.11.2026
அக்வான் புயல் ஆந்திரா-ஒடிசா எல்லைப் பகுதியில் இன்று கரையைக் கடந்தது. இதையொட்டி ஒடிசாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

வங்கக்கடலில் கடந்த 15-ந்தேதி தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவான இந்த வானிலைச் சுழற்சி, 18-ந்தேதி தீவிர புயலாக வலுப்பெற்று அக்வான் என பெயர் பெற்றது. மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த அக்வான் புயல், நேற்று வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரா, ஒடிசா கடலோரப் பகுதிகளை நெருங்கியது.

இந்த நிலையில், வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா இடையே கோபால்பூர் பகுதியில் இன்று அக்வான் புயல் கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடக்கும் நிகழ்வு 2 மணி நேரம் வரை நீடித்தது. அப்போது பலத்த காற்று வீசியது.

புயல்காரணமாக புதன் கிழமை இரவு முதல் ஒடிசாவின் கடலோர மற்றும் தெற்கு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது.

புயலால் அதிகம் பாதிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ள கஞ்சம் மாவட்டத்தில் மட்டும் 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர். ஒட்டு மொத்தமாக ஒடிசாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டு உள்ளனர். 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள், இலவச உணவகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

1,098 கர்ப்பிணிகளும் பாதுகாப்பாக மாற்றப்பட்டு உள்ளனர். தயார் நிலையாக மத்திய மாநில பேரிடர் மீட்பு குழுக்கள், தீயணைப்பு-அவசர நிலை பாதுகாப்பு குழுவினர் என 300 மீட்புக் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன. பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *