November 20, 2026

Seithi Saral

Tamil News Channel

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சட்ட நடவடிக்கை என்ன?- தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

1 min read

What legal action is being taken regarding the Tirupparankundram issue? – M.K. Stalin questions the Tamil Nadu government

20.11.2026
திருப்பரங்குன்றம் விவகாரம் பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது;-

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசு கடுமையாகப் போராடி, தமிழகத்தின் அமைதியையும், மதநல்லிணக்கத்தையும் நிலைநாட்டியது. தவெக அரசு அடுத்தகட்டமாக என்ன சட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது என்பதை முதல்வர் விளக்க வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதி அருகே பட்டப்பகலில் இரட்டைக் கொலை நடந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பல்லாவரத்தில் ஆகாஷ் எனும் இளைஞர் நேற்றிரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

இதற்கும் போலீஸ் டிஜிபியை விட்டு புள்ளிவிவரங்களைச் சொல்ல வைத்து சமாளிக்கப் போகிறாரா முதல்வர்? ஆட்சிக்கு வந்த நாள் முதல் சட்டம் ஒழுங்கிற்கு சவக்குழி வெட்டும் வேலையை மட்டுமே இந்த சோப்ளாங்கி அரசு செய்து கொண்டிருக்கிறது.
இனியாவது, பழிபோடும் தந்திரங்களையும், ரீல்சையும் விட்டு விட்டு, சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட இந்த முதலமைச்சர் முன் வர வேண்டும்.

இவ்வாறு உதயநிதி குறிப்பிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *