May 15, 2024

Seithi Saral

Tamil News Channel

ஈஷாவில் விடிய விடிய நடந்த மகாசிவராத்திரி விழா

1 min read
The Mahashivaratri festival at Isha

22/2/2020

கோவை ஈஷா யோகா மையத்தில் 26ம் ஆண்டு மகா சிவராத்திரி விழா அங்குள்ள ஆதியோகி சிலை முன் பஞ்ச பூத ஆராதனையுடன் 21ம் தேதி மாலை 6 மணிக்கு துவங்கியது. ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ் தலைமை தாங்கினார். இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு குத்துவிளக்கு ஏற்றி, நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

‘மரணம்’ தொடர்பாக சத்குரு எழுதிய ‘டெத்’ என்ற பெயரிலான புதிய ஆங்கில புத்தகத்தை, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்டார்.

விழாவில், பிரபல நாட்டுப்புற பாடகர் அந்தோணி தாசன் இசை நிகழ்ச்சி, திரைப்பட பின்னணி பாடகர் கார்த்திக் இசை நிகழ்ச்சி, கபீர் கபே குழுவின் நிகழ்ச்சிகள் இரவு முழுவதும் நடந்தது. ஈஷா சம்ஸ்கிருத மாணவர்களின் களரி மற்றும் நாட்டிய நிகழ்ச்சியும் நடந்தது. முக்கிய நிகழ்வான நள்ளிரவு தியானம் சத்குரு ஜகி வாசுதேவ் தலைமையில் நடந்தது. இதில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

நாட்டு மாடுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஈஷா யோகா மையத்தில் 350 க்கும் மேற்பட்ட பாரம்பரிய நாட்டு மாடுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதன் கண்காட்சியும் நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும், ஆதியோகி சிலையின் கழுத்தில் ஒரு வருடமாக அணிந்திருந்த 1 லட்சத்து 8 ருத்ராட்ச மணிகள் ஒவ்வொன்றும் சர்ப்ப சூத்திரம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

சிவராத்திரி நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது: இந்த விழா நம் ஆற்றலை பெருக்கி கொள்ள நல்ல சந்தர்ப்பமாக உள்ளது. ஈஷா யோகா மையத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கும் இவ்விழாவை நடத்தும் சத்குரு அவர்களை நான் பாராட்டுகிேறன். இதன் மூலம், அவர், அமைதி, வளர்ச்சி மற்றும் சகோதரத்துவத்தை பரப்புகிறார். சிவனுக்கு மரியாதை அளிப்பதற்கான ஒரு சிறந்த நாளாக இது உள்ளது. சிவன் உலகின் முதல் யோகி எனவும் அழைக்கப்படுகிறார்.

நாம் மொழி, ஆடைகள், கடவுளை வழிபடும் முறைகள் என பல வகைகளில் வேறுபட்டு இருந்தாலும் சாதி, மத, இனங்களை கடந்து இந்தியர் என்ற உணர்வால் ஒன்றாக உள்ளோம். உலகமே ஒரு குடும்பம் என பார்க்கும் ஒரே கலாச்சாரம் நம் இந்திய கலாச்சாரம் தான். மகா சிவராத்திரி போன்ற விழாக்கள் மூலம் இந்த கலாச்சாரத்தைக் பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும் பொறுப்பு நம்மிடம் இருக்கிறது.

சத்குருவிடம் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு உள்ளது. மிக கடினமான விஷயங்களை கூட ஒரு மிக எளிய முைறயில் சாமானிய மக்களுக்கு புரியும் வகையில் பேசுகிறார். அவரை போன்ற பல யோகிகள், ரிஷிகள் நமக்கு தேவை. யோகா என்பது ஒரு மதத்துடன் தொடர்பு உடையது அல்ல. அது ஒரு அறிவியல் பூர்வமானது. ஐ.நா சபையின் மூலம் யோகாவை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்த பாரத பிரதமருக்கு இத்தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இதற்காக, நம் நதிகளுக்கு புத்தூயிர்ருட்டும் விதமாக கோவை கூக்குரல் என்னும் மாபெரும் இயக்கத்தைத் சத்குரு முன்னெடுத்து உள்ளார். அந்த இயக்கத்தில் அனைவரும் பங்கேற்று அதை மேலும் வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் இம்மாச்சல் பிரேதச ஆளுநர் பண்டாரு தத்தாரேயா, மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜந்திர சிங் ஷகாவத், மத்திய அமைச்சர் அஸ்வினி குமார், தமிழக அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், திண்டுக்கல் சீனிவாசன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இரவு முழுவதும் தொடர்ந்த நிகழ்ச்சி சத்குரு ஜகி வாசுதேவ் நிறைவு உரையுடன் 22ம் தேதி காலை முடிவடைந்தது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.