கர்ப்பமானதால் 16 வயது சிறுமி தாயுடன் தற்கொலை- வாலிபர் குண்டர்சட்டத்தில் அடைப்பு
1 min read
25.2.2020
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அடுத்து ஊதியூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயதான சிறுமி அங்குள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த சிறுமி பல்லடம் அருகேயுள்ள செலக்கராச்சி கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு கோவில் விசேஷ நிழ்ச்சிக்காக சென்றுள்ளார். அப்போது தனது உறவினர் வீட்டின் அருகே வசித்த வேல்முருகன் (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இது காதலாக மாறியது. இந்நிலையில் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பல முறை உறவு கொண்டுள்ளார். இதில் சிறுமி கர்ப்பமடைந்தார்.
இதுபற்றி வேல்முருகனிடம் சொல்லி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்ட போது, வேல்முருகன், நான் ஏற்கனவே திருமணம் ஆனவன். அதனால் உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று மறுத்துள்ளார்.
இந்நிலையில் சிறுமி கர்ப்பமானது அவரது தாயாருக்கும் தெரிய வந்தது. இதனால் மனவேதனை அடைந்த சிறுமி கடந்த டிசம்பர் மாதம் 19ம் தேதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக காங்கயம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதை தொடர்ந்து வேல்முருகன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் திருப்பூர் கலெக்டரின் உத்தரவின் பேரில் தற்போது குண்டர் சட்டத்தில் வேல்முருகன் கைது செய்யப்பட்டார். இதுகுறித்த உத்தரவு கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு வழங்கப்பட்டது.