May 15, 2024

Seithi Saral

Tamil News Channel

தயாரிப்பாளரின் சேட்டையால் ஹோட்டல் அறையில் இருந்து தப்பி ஓடிய நடிகை

1 min read
The actress who fled the hotel room due to the producer’s intimidation

25.2.2020

பொங்கலுக்கு தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் பட்டாஸ். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தனுஷுக்கு ஜோடியாக மெஹரின் என்பவர் நடித்திருந்தார். படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மொழிகளில் மிகவும் பிரபலமாக நடித்து வரும் மெஹரின் தயாரிப்பாளர் ஒருவரால் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது நடிப்பில் தெலுங்கில் சமீபத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் அஸ்வத்தாமா.

இந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள தயாரிப்பாளர் நடிகையிடம் முறையிட்டுள்ளார். ஆனால் நடிகையோ ஸ்கின் பிரச்சனை இருப்பதால் வர முடியாது என தட்டிக் கழித்துள்ளார். இதனால் கோபமடைந்த தயாரிப்பாளர் நடிகை தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு பணம் கட்ட முடியாது என மிரட்டியுள்ளார்.

இதனால் உடனடியாக பெட்டி படுக்கை எல்லாம் எடுத்துக்கொண்டு யாருக்கும் தெரியாமல் ஹோட்டலை விட்டு மெஹரின் ஓடி விட்ட செய்தி கேட்டு அதிர்ந்த ஹோட்டல் ஊழியர்கள் நேரடியாக தயாரிப்பாளருக்கு நெருக்கடி கொடுத்து பணத்தை வாங்கி உள்ளனர். இந்த செய்தி நடிகைகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.