சென்னை மாதரவத்தில் உள்ள ரசாயன குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது
1 min readFire in Chemical Kuton at Madaravaram, Chennai
29/2/2020
சென்னை மாதரவத்தில் உள்ள ரசாயன குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்து
சென்னை மாதவரம் ரவுண்டானா பகுதியில் ரசாயன குடோன் ஒன்று உள்ளது. அங்கு நேற்று(சனிக்கிழமை) மாலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. அந்த குரோனில் ரசாயன பொருட்கள் இருந்ததால் அதில் பற்றிய தீயால் கரும்புகை கிளம்பியது. அந்த பகுதி முழுவதும் பரவி புகை பரவியது.
இந்த தீயானது குடோன் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார், 8 இருசக்கர வாகனங்கள் மீது பற்றி அவைகள் கருகின.
இதுபற்றிய தகவல் கிடைத்தும் 500 தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீணை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தீயை அணைக்க 3 வழிகளில் இருந்து தீவிரம் காட்டி கடுமையாக போராடி அணைத்தனர்
அந்த குடோனில் மருந்து, மாத்திரைகள் தயாரிப்பதற்கான ரசயான பொருட்கள் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அவைகள் இருந்த பேரல்கள் வெடித்து சிதறியதால் மிகுந்த எச்சரிக்கையுடன் தீயை அணைத்தனர்.
விபத்து நடந்துள்ள பகுதியில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களை பொறுத்தவரை தீக்காயம், உயிர்சேதம் போன்ற எந்தவொரு அசம்பாவித சம்பவமும் ஏற்படவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் உள்ளே பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களும் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். தீவிபத்து நடந்துள்ள பகுதியில் வாகன போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. தீவிபத்து ஏற்பட்டுள்ள ரசாயனக்கிடங்கு அருகே இந்த லாரி பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 20க்கும் மேற்பட்ட லாரிகள் தீவிபத்தில் சிக்கியது. அருகில் இருக்கும் பெட்ரோல் நிலையங்களுக்கு தீ பரவாமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மக்களுக்கு பாதிப்பு இல்லை
இந்த நிலையில் தீயணைப்புத் துறை டிஜிபி சைலேந்திர பாபு மாதவரத்திற்கு பார்வையிட்டார். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த தீவிபத்து குறித்த முதற்கட்ட விசாரணையில் கிடங்கில் விஷத்தன்மையுடைய பொருட்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இந்த தீ மற்ற தொழிற்சாலைகளுக்கும், அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவாமல் இருக்க தீ கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிகளில் இருந்து தண்ணீர் கொண்டுவரப்பட்டுள்ளன. எனவே, இந்தத் தீ விபத்து குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.