May 12, 2024

Seithi Saral

Tamil News Channel

கடலூா் மாவட்ட கலெக்டர் வீட்டின் கதவை உடைத்து 55 பவுன் நகைகள் திருட்டு

1 min read
Seithi Saral featured Image
55 poun jewelery stolen from door of District Collector's house

22/3/2020

கடலூா் மாவட்ட கலெக்டர் வீட்டின் கதவை உடைத்து 55 பவுன் நகை திருடப்பட்டு உள்ளது.

கடலூர் மாவட்ட கலெக்டராக இருப்பவர் அன்புச் செல்வன். இவரது சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே நாடியம் கிராமம் ஆகும். கலெக்டர் அன்புச் செல்வன் குடும்பத்துடன் கடலூரில் வசித்து வருகிறாா். இதனால் நாடியம் கிராமத்தில் உள்ள அவருக்கு சொந்தமான வீட்டின் காவலுக்காக அதே ஊரைச் சோ்ந்த செல்வம் (வயது 62) என்பவரை பணியில் அமா்த்தியுள்ளாா்.

திருட்டு

இந்த நிலையில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) இரவு செல்வம் வீட்டின் முன்பக்கம் காவலுக்காக படுத்திருந்தார். மறுநாள் அதாவது நேற்று (சனிக்கிழமை) காலையில் அவர் வீட்டின் பின்புறம் சென்று பாா்த்தபோது, கதவு உடைக்கப்பட்டிருந்ததும், வீட்டினுள் இருந்த பீரோ திறக்கப்பட்டு பொருள்கள் சிதறிக் கிடந்ததும் தெரிய வந்தது. அங்கு வந்த மர்ம மனிதர்கள் அங்கு பொருத்தப்பட்டிருந்த , கண்காணிப்பு கேமராக்களை கழற்றி உள்ளனர், அதை வீட்டின் பின்பக்கம் உள்ள தண்ணீா் தொட்டிக்குள் போட்டுவிட்டு சென்றதும் தெரிந்தது.

இதுபற்றி கலெக்டர் அன்புச் செல்வனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனை அடுத்து அன்புச்செல்வனின் மனைவி அங்கு வந்து பார்வையிட்டார். அப்போது , வீட்டில் பீரோவில் இருந்த 55 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடி சென்றுவிட்டது தெரியவந்தது.

இதுபற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது. பட்டுக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு சுப்ரமணியன், சேதுபாவாசத்திரம் இன்ஸ்பெக்டர் வீர. அண்ணாதுரை ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா்.

தஞ்சையில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணா்கள் சம்பவ இடத்தில் கைரேகைகளை பதிவு செய்தனா். திருட்டுச் சம்பவம் தொடா்பாக சேதுபாவாசத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். ஆட்சியா் வீட்டிலேயே நகைகள் திருடப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.