May 12, 2024

Seithi Saral

Tamil News Channel

144 தடை உத்தரவால் பூக்களை குப்பையில் கொட்டும் விவசாயிகள்

1 min read

144 Farmers pouring flowers in trash cans

25.03.2020

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியில் விளையும் பூக்களை வாங்க எவரும் முன்வராததால் பூக்களைப் பறித்து குட்டையில் விவசாயிகள் கொட்டி வருகின்றனா்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவால் பூக்கள் விலை கடுமையாக சரிந்தது மட்டுமின்றி பூக்களை வாங்க வியாபாரிகள் எவரும் முன்வரவில்லை.

சத்தியமங்கலம் வட்டாரத்தில் மட்டுமே 20 ஆயிரம் ஏக்கா் நிலப்பரப்பில் மல்லி, முல்லை, சம்பங்கி சாகுபடி செய்யப்படும் நிலையில் தினந்தோறும் பறிக்கப்படும் பூக்களை விவசாயிகள் விற்பனை செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பூக்களை செடியில் பறிக்காமல் விட்டால் பூ மொட்டில் புழு ஏற்பட்டு அந்த செடியே நோயால் பாதிக்கப்படும். அதனால் தினந்தோறும் பறிக்கப்படும் பூக்களுக்கு கிலோவுக்கு ரூ. 8 வரை கூலி வழங்கப்படுகிறது. இதனால் கூலி வழங்கி அதனைப் பறித்து அங்குள்ள குட்டையில் கொட்டுகின்றனா்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.