May 11, 2024

Seithi Saral

Tamil News Channel

ஊரடங்கு உத்தரவில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் – இறுதி ஊர்வலத்தில் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ளலாம்.

1 min read


Restrictions imposed on curfews – only 20 people can attend the funeral.

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள அடுத்த 21 நாட்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டு மக்களுடன் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக அறிவித்தார். இந்நிலையில், இந்த ஊரடங்கு சமயத்தில் எவை இயங்கும், எவை இயங்காது என்பது குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதன் முக்கிய அம்சங்கள் விவரம் வருமாறு

ரேஷன், காய், கனி, மளிகை, இறைச்சிகள், மீன் கடைகள் செயல்படும்
அத்தியாவசியப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் செயல்படத் தடையில்லை – இதுதொடர்பான போக்குவரத்துக்கும் தடையில்லை
வங்கிகள், ஏடிஎம்-கள், காப்பீட்டு நிறுவனங்கள் செயல்படும்
பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி மையங்கள் உள்ளிட்டவை செயல்படத் தடை
உணவு, மருந்து உள்ளிட்ட பொருட்களை டோர் டெலிவரி செய்யும் நிறுவனங்கள் செயல்பட அனுமதி
இறுதிச் சடங்கு போன்ற நிகழ்வுகளில் 20 பேருக்கு மேல் கூடக் கூடாது
பிப்ரவரி 15-க்குப் பிறகு வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்
விளையாட்டு, கலாசாரம் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை நடத்தத் தடை
ஊடகங்கள் செயல்படத் தடையில்லை
பெட்ரோல் பங்குகள், கேஸ் ஏஜென்சிஸ் செயல்பட அனுமதி – பெட்ரோலிய பொருட்கள் போக்குவரத்துக்குத் தடையில்லை
வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்படும் – பூஜைகள் மட்டும் நடத்த அனுமதி
செல்போன், தொலைக்காட்சிகள், இணையதளங்கள் உள்ளிட்ட சேவைகள் செயல்படும்
விமானம், சாலை மற்றும் ரயில் போக்குவரத்துக்குத் தடை
தனிமைப்படுத்துதலை மீறுபவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.