டிரம்ப்பிற்கு மீண்டும் கொரோனா பரிசோதனை
1 min read
Corona test again for Trump
3/4/2020
அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு இரண்டாவது முறையாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தனக்கு தொற்று இல்லை என அவர் தெரிவித்தார்.
டிரம்ப்
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த மார்ச் முதல் வாரம் அமெரிக்காவிலும் பரவியது.
அப்போது பேட்டியளி்த்த டிரம்ப் ,கொரோனா பற்றி அமெரிக்கர்கள் கவலைப்பட வேண்டியதில்லை .
எனினும் அனைத்து அமெரிக்கர்களுக்கும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நானும் உடல் பரிசோதனை செய்து கொண்டேன் என்றார்.
பின்னர் டிரம்ப்பிற்கு கொரோனா தொற்று இல்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்
மீண்டும் பரிசோதனை
இந்த நிலையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த டிரம்ப், “இரண்டாவது முறையாக மீ்ண்டும் நான் கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். 15 நிமிடத்தில் முடிவு வெளியானது.
அதில் எனக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரிந்து கொண்டேன்” என்றார்.