July 31, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் கொரோனா நோய் சமூக தொற்றாக மாறவில்லை -பீலா ராஜேஷ்.

1 min read
Coronavirus is not a social epidemic in Tamil Nadu

3.4.2020

தமிழகத்தில் கொரோனா நோய் சமூக தொற்றாக மாறவில்லை.கொரோனா தொற்றில் தமிழகம் இன்னும் 2ம் நிலையில்தான் இருக்கிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் 3ம் தேதி மாலை அறிவித்தார்.

ஊரடங்கு காரணமாக நாக்பூரிலிருந்து நடந்து வந்த நாமக்கல்லை சேர்ந்த பட்டதாரி இளைஞர் லோகேஷ் தெலுங்கானாவில் உயிரிழந்தார். அவரது உடல் 3ம் தேதி ெபற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தமிழகத்தில் 3ம் தேதி ஒரே நாளில் மட்டம் 102 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் 411 பேராக எண்ணிக்கை உயர்ந்துள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட 411 பேரில் 364 பேர் டெல்லி மாநாட்டிற்கு சென்றவர்கள் – சுகாதார செயலர் பீலா ராஜேஷ்.

தமிழகத்தில் அதிகபட்சமாக, சென்னையில் 81 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது .

இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 2,301 லிருந்து 2,547 ஆக உயர்வு – மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்.

தமிழகத்தில் 3ம் தேதிஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு – அமைச்சர் விஜயபாஸ்கர்.

மாநில அரசுகளுக்கு முதற்கட்ட பேரிடர் மேலாண்மை நிதியாக ரூ.11,092 கோடி வழங்க ஒப்புதல் அளித்தார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்புவோர் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். கொரோனா சோதனையில் ஒருமுறை நெகட்டிவ் என வந்தாலும் மீண்டும் பாசிட்டிவ் வர வாய்ப்புள்ளது – சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்.

கொரோனா யுத்தம்: ஏப்ரல் 5ஆம் தேதி இரவு 9 மணிக்கு சமூக விலகலை கடைபிடித்து மின்விளக்கை அணைத்து அகல் விளக்கை ஏற்றுங்கள் – பிரதமர் மோடி.

மக்கள் வெளியே சுற்றுவது அதிகரித்தால் 144 தடை உத்தரவை கடுமையாக்க நேரிடும் – முதல்வர் பழனிசாமி.

கப சுர குடிநீரை அனைவருக்கும் வழங்க அரசுக்கு உத்தரவிட முடியாது – உயர்நீதிமன்றம்.

கொரோனாவை சமாளிக்க இந்தியாவிற்கு உலக வங்கி, 1 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி.

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் கடந்த 10 நாட்களில் சிறைகளிலிருந்து 3,963 கைதிகள் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இறைச்சி கடைகள் வரும் திங்கட்கிழமை மட்டும் மூடப்படும் : பிற நாட்களில் இறைச்சி கடைகள் வழக்கம் போல் செயல்படும்.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு உதவ ரோபோ அறிமுகம். நோயாளி / தனிமைப்படுத்தப்பட்டோருக்கு மருந்து, உணவு வழங்கும் பணியில் ரோபோ ஈடுபடுத்தப்படும் – அமைச்சர் விஜயபாஸ்கர்.

கொரோனா பரவாமல் தடுப்பதற்காக சிங்கப்பூரில் ஏப்.7 ஆம் தேதி முதல் ஒரு மாதத்துக்கு ஊரடங்கு அறிவிப்பு : ஊரடங்கில் அத்தியாவசிய தேவைகள், பொருளாதார துறைகளுக்கு விதிவிலக்கு – சிங்கப்பூர் பிரதமர் லீ சியாங் லூங்.

அரசு அங்கீகரித்த செய்தியாளர்களுக்கு தலா ரூ.3,000 நிவாரண உதவி வழங்கப்படும் – முதல்வர் பழனிசாமி.

ஏப்ரல் மாத இலவச ரேஷன் பொருட்களை இந்த மாத இறுதி வரை பெற்றுக் கொள்ளலாம்.டோக்கன் தரும்போதே கொரோனா நிவாரண நிதி ரூ.1,000 வழங்கப்படும் – முதல்வர் பழனிசாமி.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஒருநாள் ஊதியம் பிடித்தம் – பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை அறிவிப்பு.

கோவை ஈஷா நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது – சுகாதாரத்துறை.

இந்திய ரயில்வே இதுவ்ரை 2,87,704 முகக்கவசங்கள் உற்பத்தி செய்து உள்ளதாக ரயில்வேதுறை தகவல்.

மும்பை விமான நிலையத்தில் பணியில் ஈடுபட்டிருந்த 11 சி.ஐ.எஸ்.எஃப் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *