இளம் நடிகரை கவுக்க திட்டம் போட்ட பிரபல நடிகை
1 min read
பிட்டுபட ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும் அதன்பிறகு தட்டுத்தடுமாறி தனது அழகால் இளம் பெண்களை கவர்ந்து வைத்துக்கொண்டு சமீபகாலமாக ஹிட் படங்களையும் கொடுத்து வருகிறார் அந்த இளம் நடிகர்.
இந்த இளம் நடிகரும் அந்த பெரிய முதலாளி வீட்டுக்கு சென்று வந்த நடிகையும் நடித்த படம் எதிர்பாராத விதமாக பெரிய வெற்றியைப் பெற்றுவிட்டது. மேற்கொண்டு இருவருக்கும் ஜோடிப்பொருத்தம் நல்லா இருக்கிறது என்று பலரும் கிளப்பி விட்டனர்.
இருவரும் படத்தில் பண்ணிய சேட்டைகள் கொஞ்ச நஞ்சமில்லை. தியேட்டருக்கு சென்றவர்கள் எல்லாம் மூடுடன் தான் வந்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அந்த படம் ஹிட்டாக அதனை தொடர்ந்து டாப் நடிகர் நடித்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றவர் இன்னொரு நாயகி.
அவரும் இந்த இளம் நடிகரும் நடித்து சமீபத்தில் வெளிவந்த படம் ஒன்று சுமாரான வெற்றியைப் பெற்றது. அப்போது அந்த நடிகைக்கு இந்த இளம் நடிகரின் மேல் ஒரு பார்வை விழுந்து விட்டதாம். எப்படியாவது நடிகரை கவுத்துவிட வேண்டும் என தினமும் போன் செய்வதும் பார்ட்டிக்கு அழைத்துச் செல்வது என தன்னுடைய பங்கிற்கு ஹீரோவை வசீகரிக்க முயற்சி செய்கிறாராம்.
இதனை அறிந்த இன்னொரு நாயகி, அந்த இளம் நடிகரும் நானும் காதலிக்கிறோம் என்றும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் எனவும் ரசிகர்கள் மத்தியில் போட்டு உடைத்தார். விளையாட்டுப் போக்கில் சொல்லி இருந்தாலும் ஒரு இக்கு வைத்துதான் சொல்லி இருக்கிறார் அந்த நாயகி.
இதனை அறிந்த அந்த இளம் நடிகர் இரண்டில் எந்த ஒன்றை தொடர்வது என பலத்த யோசனையில் உள்ளாராம். யோசிக்கும்போதே தட்டித் தூக்கிவிட வேண்டும் என இரண்டு நாயகிகளும் அடித்துக் கொள்வதால் தமிழ் சினிமாவில் யாருக்கும் தெரியாமலேயே ஒரு பனிப்போர் நடந்து வருகிறதாம்.
இருந்தாலும் அந்த இளம் நடிகருக்கு ஓவர் ரொமான்ஸ் செய்த நாயகியின் மீது தான் ஒரு ஈடுபாடு இருக்கிறது. இப்போதுதான் அந்த இளம் நடிகரின் படங்கள் ஓரளவு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று கவனிக்கப்படும் நாயகனாக மாறி வருகிறார்.
நன்றாக போய்க் கொண்டிருக்கையில், தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வதைப் போல காதலில் விழுந்து இருப்பதையும் கெடுத்துக் கொள்ள வேண்டாம் என உஷாராக இருக்கிறாராம் அந்த இளம் நடிகர்.