May 14, 2024

Seithi Saral

Tamil News Channel

மருத்துவ பணியாளர்களை தாக்கினால் 7 ஆண்டு சிறை; அவசர சட்டம் வருகிறது

1 min read
Seithi Saral featured Image

7 years jail if attacking medical personnel; Emergency legislation is coming

22-4-2020

மருத்துவ பணியாளர்களை தாக்கினால் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் அவசர சட்டத்திற்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது.

மருத்துவர்கள்

தற்போது இந்தியாவில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த பெரும் முயற்சி எடுத்து வருகிறார்கள். கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களை டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் தங்கள் உயிரை துச்சமாக மதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கொரோனாவால் டாக்டர்களும் இறந்த பரிதாபம் இந்தியாவில் நடந்துள்ளது. தமிழ் நாட்டில் மட்டும் 2 டாக்டர்கள் இறந்து இருக்கிறார்கள்.
அந்த டாக்டர்களின் உடல் அடக்கம் மற்றும் தகனத்திற்கு மயானத்தில் எதிர்ப்பு கிளம்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் கல்வீச்சு சம்பவமும் நடுந்துள்ளது.

7 ஆண்டு சிறை

இந்த நிலையில் இக்கட்டான நிலையில் பணியாற்றி வரும் மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வரஉள்ளது. அதாவது மருத்துவ பணியாளர்களை யரேனும் தாக்கினால் அவர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் சட்ட திருத்தத்திற்கு மத்திய மந்திரி சபை நேற்று ஒப்புதல் அளித்தது.

மேலும் இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் மருத்துவ பணியாளர்களை பாதுகாக்க நாங்கள் உறுதி பூண்டுள்ளதை தொற்று நோய் அவசர சட்டம் 2020 வெளிப்படுத்துகிறது என்று குறிப்பிட்டு உள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.