June 20, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது; முதலிடத்தில் மராட்டியம்

1 min read
Seithi Saral featured Image

Corona inIndia.- Maharashtra

22-4-2020

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியது. மராட்டிய மாநிலத்தில்தான் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனா

சீனாவில் தொடங்கிய கொரோனா பல்வேறு நாடுகளில் உயிர்பலி வாங்கி வருகிறது. கொரோனாவுக்கு உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில்தான் அதிகம்.
இந்தியாவிலும் கொரோ பாதிப்பு உள்ளது. இங்கும் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

20 ஆயிரத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 20 ஆயிரத்தை தாண்டியது. மொத்தம் நாடு முழுவதும் 20 ஆயிரத்த 471 பேர் பாதிக்ப்பட்டு உள்ளனர்.

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 652 ஆக அதிகரித்து உள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 3,960 பேர் குணம் அடைந்து உள்ளனர்.

மராட்டியம்

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மராட்டிய மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் மொத்தம் 5,221 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மராட்டியத்தில் 251 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.
மராட்டியத்திற்கு அடுத்து குஜராத்தில் 2,272 பேரும், டெல்லியில 2,156 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *