May 12, 2024

Seithi Saral

Tamil News Channel

கொரோனா நோயாளிகளை இந்தியாவிற்குள் அனுப்பும் பாகிஸ்தான்

1 min read
Pakistan sending corona patients into India

கொரோனா நோயாளிகளை இந்தியாவிற்குள் அனுப்பும் பாகிஸ்தான்

ஸ்ரீநகர்: பாகிஸ்தான், கொரோனா வைரஸ் நோயாளிகளை இந்தியாவிற்குள் அனுப்புவதாக ஜம்மு-காஷ்மீர் போலீஸ் இயக்குநர் ஜெனரல் (டிஜிபி) தில்பாக் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

உலகமே கொடிய தொற்றுநோயான கொரோனா வைரசை எதிர்த்துப் போராடி வரும் நிலையில், பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிரான மோசமான நடவடிக்கைகளைத் தொடர்ந்து வருகிறது. அவ்வபோது போர் நிறுத்தத்தை மீறும் பாகிஸ்தான், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 17 பேர் இறந்துள்ளனர். மொத்தம் 9749 பேர் பாதிக்கப்பட்டு, 209 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 4,328 பேர், சிந்து மாகாணத்தில் 3,053 பேர், கைபர்-பக்துன்க்வா மாகாணத்தில் 1,345 பேர், பலூசிஸ்தான் 495 பேர், கில்கிட்-பால்டிஸ்தான் 284 பேர், இஸ்லாமாபாத் 194 பேர் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 51 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.இந்நிலையில், கொரோனா பாதித்த பாக்., நோயாளிகளை இந்தியாவிற்குள் அனுப்புவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து ஜம்மு-காஷ்மீர் போலீஸ் இயக்குநர் ஜெனரல் (டிஜிபி) தில்பாக் சிங் கூறியதாவது: முன்பு பயங்கரவாதிகளை மட்டுமே இந்தியாவிற்கு அனுப்பும் பாகிஸ்தான், தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களையும் அனுப்பத் தொடங்கியுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது கவலைக்குரிய விஷயம். அவர்கள் இங்குள்ள மக்களிடையே நோய் தொற்றை பரப்புவார்கள். அதனால் முன்னெச்சரிக்கை தேவை. இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.