May 12, 2024

Seithi Saral

Tamil News Channel

பலாப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

1 min read
Benefits of eating jackfruit

பலாப்பழம் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்

பலாப்பழத்தில் வைட்டமின் “ எ சக்தி நிறைந்திருக்கிறது. இந்த வைட்டமின் உடலின் நலத்திற்கும், குறிப்பாக கண்பார்வையின் நலத்திற்கு மிகவும் அவசியமாகும்.

கண்பார்வை மங்குதல், மாலை கண் நோய் போன்றவை இந்த சத்து குறைபாடுகளால் ஏற்படுகின்றன. எனவே கண்களின் நலம் பேண பலாப்பழங்களை சாப்பிட்டு வருவது நல்லது பலா பழத்தின் நன்மைகள் பலாவில் அளவில் வைட்டமின் சி இருப்பதால், அவை உடலைத் தாக்கும் வைரஸ் மற்றும் பாக்டீரியாவை எதிர்த்து, உடலுக்கு நல்ல பாதுகாப்பைத் தரும்.

குறிப்பாக வைட்டமின் சி, வெள்ளையணுக்களின் வலுவை அதிகரிக்கும் தன்மையுடையவை. எனவே ஒரு கப் பலாப்பழம் சாப்பிட்டால், உடலுக்கு ஒரு நல்ல நோய் எதிர்ப்பு கிடைக்கும்.இப்பழத்தில் வைட்டமின் சி-யுடன், புற்றுநோயை எதிர்த்துப்போராடும்பைட்டோ நியூட்ரியண்ட்டுகளான லிக்னைன்கள், ஐசோஃப்ளேவோன்கள் மற்றும் சாப்போனின்கள் அதிக அளவில் உள்ளன.

இவை உடலில் உள்ள பாதிக்கப்பட்ட செல்களால் ஏற்படும் கொடிய நோயான புற்றுநோய் உண்டாவதை தடுக்கும். பலாப்பழம் இனிப்புச் சுவை அதிகம் இருப்பதால் சிலர் பழத்தை அதிகம் சாப்பிட்டு, வயிற்றுப் பொருமலால் அவதிப்படுவர். அதற்கு ஒரு பலாக் கொட்டையை மென்று சாறை மட்டும் விழுங்கினால் உடனே வயிற்றுப் பொருமல் நீங்கும்.

பலாக் கொட்டைகளை சுட்டும், அவித்தும் சாப்பிட்டால் காரத்தோடு சாப்பிடுங்கள் அப்போது வாயுத் தொல்லைகளை நீக்க உதவும். பலாமரத்தின் பயன்களை முழுமையாகப் பெற்று ஆரோக்கியம் அடைவோம். புற்றுநோய்கள் பல வகை இருக்கின்றன. இதில் மனிதர்களின் குடலில் ஏற்படும் புற்றுநோய் மிகக் கொடியது பலாப்பழம் நச்சுக்களையும் தீய செயல்களின் வளர்ச்சியும் அழிக்கும் தன்மை கொண்டது.

எனவே பலாப் பழங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு குடல்புற்று ஏற்படும் ஆபத்து குறைகிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் பலருக்கும் இக்காலங்களில் தலைமுடி கொட்டுதல், பொடுகு, தலைமுடியில் ஈரப்பதம் இல்லாமை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

பலாப்பழம் சாப்பிடுபவர்களுக்கு அதிலிருக்கும் வைட்டமின் “எ சத்து தலைமுடி உதிர்வதை தடுக்கிறது. இளநரை, பொடுகு போன்ற பிரச்சனைகளை விரைவில் தீர்ப்பதில் பலாப்பழம் மிகுந்த ஆற்றல் வாய்ந்த ஒரு இயற்கை உணவாக இருக்கிறது.

பலாப்பழத்தில் புரோட்டீன் அதிகம் இருப்பதால், இதனை சீசன் போது தினமும் உட்கொண்டு வாருங்கள். மேலும் இது பருப்பு வகைகளுக்கு சிறந்த மாற்றாக விளங்கும். இதனால் பருப்புக்களின் மூலம் ஏற்படும் வாய்வுத் தொல்லையைத் தவிர்க்கலாம். ஏனெனில் பலாப்பழம் வருடம் முழுவதும் கிடைக்காது. அதற்கென்று வரும் சீசன் போது வாங்கி சாப்பிட்டால் தான், அதன் உண்மையான சுவையை ருசிக்க முடியும்.

உடல் எடையில் மாற்றம் தெரிய வேண்டுமா? அப்ப உங்க டயட்-ல பலாப்பழத்தை சேத்துக்கோங்க… பலாப்பழம் மட்டுமின்றி, அதன் விதையிலும் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. அதில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், பைட்டோ நியூட்ரியன்ட்டுகள், கார்போஹைட்ரேட்டுகள், எலக்ரோலைட்டுகள், நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் போன்றவை வளமாக உள்ளது.கால்சியம் சத்தை உடலில் உறிஞ்சுவதற்கு தேவையான மெக்னீசியம், பலாப்பழத்தில் அதிகம் உள்ளது. இதனால் எலும்புகளில் எந்த ஒரு பிரச்சனையும் வராமல், எலும்புகள் வலுவோடு இருக்கும்.
இதில் உள்ள இனிப்பைத் தரக்கூடிய ஃபுருக்டோஸ் மற்றும் சுக்ரோஸ், சுவையை மட்டுமின்றி, உடலில் எனர்ஜியையும் அதிகரிக்கிறது. மேலும் இதில் கொழுப்பு எதுவும் இல்லாததால், இது ஒரு ஆரோக்கியமான பழங்களுள் ஒன்றாக உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.