April 28, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்த ஆண்டு அட்சய திருதியையில் என்ன செய்யலாம்?

1 min read

What can be done on Atchaya thiruthiyai this year?

·         ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குங்கள் என்ற நகைக்கடை அதிபர்கள் விளம்பரம் செய்வார்கள். அதேபோல் இந்த  ஆண்டும் அதேபோல் விளம்பரம் செய்துள்ளார்கள்.

·         இது “அடைத்த கடையில் உடைத்த சோடா வாங்கி வா” என்று சொன்ன  கதையாக உள்ளது. ஆமாம் ஊடரங்கு உத்தரவு காலத்தில் பொதுமக்கள் எந்த கடைக்குப்போய் தங்கம் வாங்கி வருவார்கள்?

·         ஆனால்  வழக்கம்போல் அன்றாடம் தங்கம் விலை உயர்வு வீழ்வதுமாக இருக்கிறது. மற்ற நாட்களில் என்றால் இந்த தங்க விலையை பொதுமக்கள் ஆவலுடன் பார்ப்பார்கள். ஆனால் இப்போது அதை யாருமே கண்டு கொள்ளவில்லை.

·         ஆனாலும் இந்த விலை பட்டியல் ஆன் லைனின் வியாபாரம் செய்பவர்களுக்கு மட்டுமே பயன்படும். சாதாரண மக்களுக்கு எந்த பிரயோஜமும் கிடையாது.

·         இந்த ஆண்டு ஊரடங்கு காலத்தில் அட்சய திருதியையொட்டி சில நகைக்கடை அதிபர்கள் நூதன பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். அதவாது வங்கி மூலம் பணத்தை தந்து எவ்வளவு தங்கம் வேண்டுமோ அதை பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அந்த வாங்கப்பட்ட நகையை ஊரடங்கு உத்தரவு முடிந்ததும் தந்துவிடுவோம் என்றும் அறிவித்து உள்ளனர். அட்சய திருதியை அன்று நீங்கள் வாங்கிய தங்கத்தை பூஜையில் வைத்து வழிபடுவார்களாம்.

·         சாதாரண மக்களை எந்த அளவுக்கு இது முட்டாளாக்குகிறது பாருங்கள். ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும் அட்சய திருிதயை அன்று நகை வாங்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல. அதுவும் இந்த ஊரடங்கு காலத்தில் அதில் போய் பணத்தை முடக்க வேண்டாம்.

·          

·         அட்சய திருதியை என்பது சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியை திதி நாள்தான் அட்சய திருதியை. பாண்டவர்களுடன் வனவாசம் வந்த திரவுபதிக்கு கிருஷ்ணர் அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரத்தை வழங்கினார். அதேபோல் குசேலருக்கு செல்வத்தை வழங்கிய நாளும் இதுதான் என்று கூறுவார்கள்,

·         அதேபோல் இன்றைய தினம் தங்கம் வாங்கினால் தங்கம் பெருகும் என்பது மக்கள் நம்பிக்கை, மக்களின் நம்பிக்கை என்பதை விட நகைக்கடை உரிமையாளர்களின் பிரசாரம். ஐப்பசி மாதம் வரும் தன திரயோதசி நாள் தான் தங்கம் வாங்க சிறந்த நாள் என்றும் சிலர் கூறுகிறார்கள்.-

·         உண்மையில் அட்சய திருதியை அன்று என்ன செய்ய வேண்டும்?

·         அட்சய திருதியை அன்று நாம் திருதியை திதியின் தெய்வமாக பார்வதியை வணங்குவது நல்லது.  அன்றைய தினம் மங்களகரமாக பொருளை வாங்கி வீட்டில் வைக்க வேண்டும். குறிப்பாக மஞ்சள் வாங்கி வைக்கலாம். மேலும் அன்றய தினம் வெயிலால் தவிக்கும் பொதுமக்களுக்கு பழங்கள், நீர்மோர், அன்னம் கொடுத்து உபசரித்தால் புண்ணியம் கிடைக்கும் புராணம் கூறுகிறது. இந்த ஆண்டு இன்று (25-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை ) அட்சய திருதியை வருகிறது. திருதியை திதி முந்தைய நாளான 25-ந் தேதி சனிக்கிழமை பகல் 11.34 மணிக்கு தொடங்குகிறது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை பகல் 12.21 மணிவரை திருதியை திதி நீடிக்கிறது. எனவே இன்று அதிகாலையில் குளித்துவிட்டு சாமி படத்தின் முன் உப்பு மஞ்சளை வைத்து பூஜை செய்தால் போதும். அட்சய திருதியை பலன் உங்களுக்கு கிடைக்கும்,

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.