கொரோனா – மயிரிழையில் தப்பிக்கும் இந்தியா
1 min readமயிரிழையில் தப்பிக்கும் இந்தியா
உலக நாடுகள் அனைவருக்கும் இப்போது இந்தியாவின் மீது கவனம் ஏற்பட்டு உள்ளது. காரணம் அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாத கொரோனா நோய் பரவும் விகிதமும், இறப்பு விகிதமும் தான் காரணம். இறப்பு விகிதம் அதிகமாக பெல்ஜியத்தில் 15% இங்கிலாந்து மற்றும் இத்தாலியில் 13% ஆகவும், அமெரிக்காவில் ஐந்து சதவீதம் ஆகவும் இருக்கும் போது இந்தியாவில் மட்டும் 3.1% ஆக இருக்கிறது.
நோய் இருமடங்கு ஆகும் நாட்கள் பத்து நாட்கள் ஆகி இருக்கின்றன
இதற்கு பின் வரும் காரணங்களை குறிப்பிடுகிறார்கள்.
1) genetic நமது மரபணு இயற்கையாகவே நோய் எதிர்க்கும் ஆற்றலை அதிகமாக கொண்டு உள்ளது.
2)BCG போன்ற தடுப்பூசிகள் இளம் வயதில் போட்டு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்திக் கொண்டது.
3) அதிக வெப்பமான சூழ்நிலை
4) வீரியம் குறைந்த திடீர் மாற்றம் அடைந்த வைரஸ்
5)மாநிலங்களில் உள்ள கட்டமைப்புகள். ஆட்சி அதிகாரங்கள், தன்னிச்சையாக செயல்படும் தன்மை.
6)சிறிது சிறிதாக இடங்களை பிரித்து கட்டுப்படுத்தும் தன்மை
7)உலக தரத்திற்கு இணையான மருத்துவ வசதிகள்.
8)பொருளாதார இழப்பை பொருட்படுத்தாது ஆரம்ப நிலையிலேயே முழுவதும் லாக் டவுன் செய்தது
9)பொது சுகாதார துறை நடவடிக்கைகள்
இந்த பிரச்சினையான நேரத்தில் நேற்று வைரஸ் துறையியல் நிபுணர் ராபர்ட் கெல்லோ வின் பேட்டி ஒன்று காண நேர்ந்தது. அதாவது இந்த கோவிட் வைரஸ் தடுப்பூசி வருகிற வரைக்கும் சும்மா இருக்காமல், போலியோ தடுப்பு சொட்டு மருந்து பரிந்துரை செய்யலாம். ஏனெனில் இந்த மாதிரி போலியோ தடுப்பு சொட்டு மருந்து இன்பூயன்ஸ்யா நோய் பரவும் போது ஏற்கனவே கொடுத்து இருப்பதாகவும் அது நோய் பரவும் விகிதம் 3.5 மடங்கு குறைத்ததாகவும் செய்திகள் உள்ளன என்று தெரிவித்தார்.
இது தெற்காசிய நாடுகள் மற்றும் இந்தியாவிற்கும் அடுத்த மூன்று மாதங்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
இந்த சொட்டு மருந்து உட்கொள்ளப்படும் போது அது ஏற்கனவே உடம்பில் உள்ள எதிர்ப்புச் சக்தியை தூண்டி விட்டு இந்த தடுப்பூசியில் உள்ள வைரஸ் அழிப்பதற்கு முயற்சிகள் மேற் கொள்ளும். அந்த நிகழ்ச்சியின் போது புதிதாக உடம்பில் நுழையும் வைரஸ் அழிவதற்கும் வாய்ப்பு உள்ளது என்றும் கூறியுள்ளார்.
ஏற்கனவே இந்த தடுப்பு மருந்துகள் போட்டவர்கள் போட தேவை இல்லை என்றும், அப்படி தடுப்பூசி போடதவர்களுக்கு இது ஒரு பாதுகாப்பு சாதனமாக பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் முதல் வரிசையில் இருந்து போராடும் காவல்துறையினர், ஆட்சியாளர்கள், ஊடகங்கள், அத்தியாவசிய பணிகளில் இருப்பவர்களுக்கு கொடுத்தால் பலன் இருக்கும் என்றும் பரிந்துரை செய்து உள்ளார்
இந்த மாதிரி ஆராய்ச்சிகளில் ஏற்கனவே அமெரிக்காவில் உள்ள FDA போன்றவை ஈடுபட்டு உள்ளனர். ஆனால் WHO இந்த மாதிரி போலியோ தடுப்பூசி கொரோனாவை தடுக்க பயன்படாது என்று அறிக்கை கொடுத்து உள்ளது. வழக்கம் போல போலியோ தடுக்க போட்டுக் கொள்ளலாம். ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளாக இது பரிந்துரை செய்யவில்லை என்று தெளிவாக கூறியுள்ளது
இந்தியாவில் இந்த ஆராய்ச்சி முடிவுகள் எந்த அளவிற்கு பலன் தரும் என்று தெரியவில்லை. ராபர்ட் கெல்லோவின் கூற்றுப்படி நாம் ஏற்கனவே போலியோ தடுப்பு சொட்டு மருந்து கொடுப்பதில் தமிழ் நாடு 100% அடைந்து உள்ளது. அதனால் இதைப் பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று தோன்றுகிறது.
இருந்தாலும் முண்ணனியில் நிற்கும் ஆட்களுக்கு ஒரு பூஸ்டர் டோஸ் கொடுத்தால் என்ன என்ற கேள்வியும் எழாமல் இல்லை. அதாவது நீண்ட நேரம் அப்படியே உள்ள கம்ப்யூட்டரில் F5 அழுத்தி refresh செய்வது போல இந்த தடுப்பூசி நமது எதிர்ப்புச் சக்தியை தூண்டி விடும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அநேகமாக நமது ICMR மேற் கொள்ளும் அடுத்த கட்ட ஆராய்ச்சி இதுவாகத் தான் இருக்கும்.
ஏனெனில் ஊரடங்கு உத்தரவு என்ற பெயரில் எல்லாம் இருந்தும் அதையே நாம் வகை வகையாக அறிவித்து கொரோனா பரவும் விகிதம் கூட்டிக் கொண்டு இருக்கும் காலக் கட்டத்தில் பல்வேறு வகையான பரிசோதனைகள் மேற் கொள்ள வேண்டியது அவசியம்
ஏற்கனவே சொன்ன எல்லாக் கருத்து கணிப்புகளையும் மீறிய மாதிரி கீழே உள்ள கருத்து கணிப்புகளையும் மீறிச் செல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது