வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்துவர மத்திய அரசு நடவடிக்கை
1 min readCentral Government steps to rescue Indian trapped Indians abroad
வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை
26/4/2020
கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை சிறப்பு விமானங்கள் மூலம் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
வெளிநாட்டில் இந்தியர்கள்
தொழில் நிமித்தமாகவும் படிப்புக்காகவும் இந்தியர்கள் பலர் வெளிநாட்டில் வசிக்கிறார்கள். தற்போது கொரோன தொற்று பரவல் காரணமாக அவர்ககள் நாடு திரும்ப முடியாமல் தவிக்கிறார்கள்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மாதம் 22-ந் தேதி இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதனால் தாயகம் திரும்ப முடியாமல் பல்வேறு நாடுகளில் இந்தியர்கள் உள்ளனர்.
அவர்களை மீட்பது தொடர்பாக, பிரதமர் மோடி முக்கிய மந்திரிகள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே, ஊரடங்கு முடிந்ததும் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களை சிறப்பு விமானம் மூலம் அழைத்துவர மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை அங்கிருந்து அழைத்து வந்ததும் அவர்களுக்காக மருத்துவ படுக்கைகளுடன், அவர்களை தனிமைப்படுத்துவதற்கான வசதியையும் ஏற்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு, மத்திய அமைச்சரவை செயலாளர் வலியுறுத்தி உள்ளார்.