பாலிவுட் நடிகர் இர்பான் கான் திடீர் மரணம்
1 min read
பிரபல ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நடிகர் இர்பான் கான் உடல்நலக் குறைவால் காலமான செய்தி கேட்டு சினிமா உலகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
லைஃப் ஆஃப் பை என்ற படத்தில் பிரபல நடிகராக வலம் வந்த இர்பான் கான், பாலிவுட்டிலும் சிறந்த நடிகராக வலம் வந்தார்.
இந்நிலையில் சமீபகாலமாக அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது. அதுமட்டுமில்லாமல் அவரது உடலில் நியூரோ என்டோகிரைன் கட்டியிருப்பது கடந்த 2018 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
அப்போதிலிருந்து தீவிர சிகிச்சை மேற்கொண்ட இர்பான் சமீப காலமாக படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட இர்பான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது விட்டார் என செய்திகள் வெளியாகியுள்ளது.
இர்ஃபான் கானின் தாயார் ஜெய்ப்பூரில் காலமானார். லாக்டவுன் காரணமாக தாயின் இறுதிச்சடங்கில் அவரால் பங்கேற்க முடியவில்லை. இந்நிலையில் இவருக்கும் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்த செய்தி பல நட்சத்திரங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.