சென்னையில் ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா பாதிப்பு
1 min readCoronation affects 103 people in one day in Chennai
29/4/2020
சென்னையில் நேற்று ஒரே நாளில் 103 பேருக்கு கொரேனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு பரவி வருகிறது. தமிழகத்திலும் பாதிக்கபட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் அதிக அளவில் பாதிப்பு பரவி வருகிறது.
நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 121 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதில் சென்னையில் மட்டும் 103 பேருக்கு இருப்பது அதிர்ச்சி தரும் செய்தியாகும்.
செங்கல்பட்டு- 12, நாமக்கல்-2, காஞ்சிபுரம்-1, கள்ளக்குறிச்சி-3 என்ற அளவில் கொரோனா தொற்று இருப்பது நேற்று கண்டறியப்பட்டு உள்ளது.
வயது வாரியாக…
தமிழகம் முழுவதும் 2058 பேர் மொத்தம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களில் ஆண்கள் 1393 பேர். பெண்கள் 669 பேர்.
இவர்களில் 12 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் 65, பெண்கள் 56.
13 முதல் 60 வயதுக்குட்பட்ட ஆண்கள் 1160. பெண்கள் 537.
60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் 168. பெண்கள்72
தமிழகத்தில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் இறந்தார். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்வு.
மாவட்ட வாரியாக
சென்னை 678
கோவை 141
திருப்பூர் 112
தி்ண்டுக்கல் 80
மதுரை 79
ஈரோடு 70
செங்கல்பட்டு 67
நொல்லை 65
நாமக்கல் 61
திருவள்ளூர் 54
தஞ்சாவூர் 54
விழுப்புரம் 52
திருச்சி 51
தேனி 44
நாகப்பட்டினம் 44
கரூர் 41
ராணிப்பேட்டை 38
தென்காசி 35
விருநகர் 32
சேலம் 31
திருவாரூர் 30
தூத்துக்குடி 27
கூடலூர் 26
வேலூர் 23
காஞ்சீபுரம் 19
திருப்பத்தூர் 18
கன்னியாகுமரி 16
ராமநாதபுரம் 15
சிவகங்கை 12
திருவண்ணாமலை 11
நீலகிரி 9
கள்ளக்குறிச்சி 9
பெரம்பலூர் 7
அரியலூர் 5
புதுக்கோட்டை 1
தர்மபுரி 1
தமிழகத்தில் இதுவரை 1லட்சத்து 1874 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்களை அச்சம் கொள்ள வைத்துள்ளது.