May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

மதுக்கடைகள் திறப்பதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு

1 min read

Madurai case filed in Madras High Court

5-5-2020
தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்படுவதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

மதுக்கடைகள்

இந்தியா முழுவதும் ஊரடங்கு மே 17-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டாலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி சிவப்பு மண்டலங்களை த் தவிர மற்ற இடங்களில் மதுக்கடைகளை திறக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்து விட்டது.
இதனை அடுத்து கடந்த 4-ந் தேதியே சில மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு விட்டன. தமிழகத்தில் 7-ந் தேதி வரை மதுக்கடைகள் திறக்கப்படுகிறது.

வழக்கு

தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்படுவதுற்கு பல்வேறு தரப்பில் இருந்த கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.
டாஸ்மாக் மதுக் கடைககளை திறப்பதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ராம்குமார் ஆதித்தன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், “தற்போது கொரோனா பரவி வரும் நிலையில் மதுக்கடைகளை திறக்க கூடாது. கொரோனா முழுவதும் இல்லாத நிலையை எட்டிய பிறகே தமிழகத்தில் மதுக் கடைகள் திறக்க வேண்டும்” என கூறப்பட்டு உள்ளது..
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.