நெல்லையில் பசுபதி பாண்டியன் ஆதரவாளர் வெட்டிக்கொலை
1 min read
Pashupati Pandian supporter hacked to death in nellai
21/5/2024
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை கேடிசி நகர் பகுதியில் பசுபதி பாண்டியன் ஆதரவாளர் தீபக் ராஜன் என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் கே டி சி நகர் புறவழிச் சாலை பாலம் அருகில் வைர மாளிகை உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தின் முன்பு மூன்றடைப்பு அருகே உள்ள வாகைகுளம் பகுதியைச் சேர்ந்த தீபக் ராஜன் என்பவர் அந்த உணவகத்தில் சாப்பிட வந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீபக் ராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை வலை வீசி தேடி வருகிறார்கள்.
பட்டப் பகலில் வெட்டி கொலை செய்யப்பட்ட தீபக் ராஜன் தூத்துக்குடி மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள வாகைகுளம் பகுதியை சேர்ந்தவர். இவர் பசுபதி பாண்டியன் ஆதரவாளர் என தெரியவந்துள்ளது.
கொலையுண்ட தீபக் ராஜன் மீது நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கொலை,கொலை முயற்சி உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.
இவர் காவல்துறை பதிவேட்டில் உள்ள குற்றவாளியாக உள்ளார்.இந்த படுகொலை முன்விரோதத்தில் பழிக்குப்பழியாக நடந்த கொலையாக இருக்கலாம் என்றும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தாழையூத்தில் காண்டிராக்டர் கொலையிலும் இவருக்கு தொடர்பு உண்டு என்று கூறப்படுகிறது
தீபக் ராஜன் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.இவரது மனைவி கண் எதிரே இந்த கொலை நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.