உடலுறவு மூலமாகவும் கொரோனா பரவும் ஆபத்து; சீன டாக்டர்கள் எச்சரிக்கை
1 min read
The risk of coronal transmission through intercourse; Chinese doctors warn
9-5-2020
கொரோனா வைரஸ் உடலுறவு மூலமும் பரவும் என சீன டாக்டர்கள் கூறியுள்ளனர். அதாவது உயிரணுகள் மூலமாகவும் பரவ வாய்ப்புள்ளது என சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்.
சீனாவில் ஆராய்ச்சி
சீனாவில்தான் கொரோனா வைரஸ் முதலில் பரவியது. அங்கு பலரது உயிரை குடித்த கொரோனா தற்போது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.
அந்த நாட்டில் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வு துரிதமாக நடந்து வருகிறது. மேலும் கொரோனா பற்றிய ஆராய்ச்சியும் நடந்த வருகிறது.
சீனாவில் உள்ள குவி முனிசிப்பல் ஆஸ்பத்திரியில் 38 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களைப் பரிசோதித்ததில் உயிரணுக்கள் மூலமும் கொரோனா வைரஸ் பரவுவது கண்டறியப்பட்டது. ஆய்வு செய்யப்பட்டவர்களில் 16 சதவீதம் பேரின் உயிரணுவில் கொரோனா வைரஸ் இருந்தது தெரியவந்துள்ளது. அதாவது உடலுறவு மூலம் பரவியது தெரியவந்தது.
கொரோனா வைரஸ் கொரோனா பாதித்தவர்களது விந்தணுவில் இருந்ததாக சீன மக்கள் லிபரேஷன் ஆர்மி ஜெனரல் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் டயாங்கெங் லீ தெரிவித்துள்ளார். ஆண்களின் விந்தணுவில் கொரோனா வைரசால் இனப்பெருக்கம் செய்ய முடியாது என்றும் இவை கருமுட்டையில் செலுத்தப்படும் சமயத்தில் உடல் நோய் எதிர்ப்பு சக்தி பயன்படாது என்றும் டாக்டர்கள் கூறுகின்றனர்.
ஜாமா நெட்வொர்க் என்ற பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டு உள்ளது.
மலம் மூலமாகவும்…
மேலும் இந்த ஆய்வில் கொரோனா மட்டுமல்லாமல், எபோலா, சிகா உள்ளிட்ட வைரஸ்களும் ஆண்களின் உயிரணு செல்லும் பாதையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. வைரஸ் தாக்கத்தில் இருந்து நோயாளி முழுவதுமாக குணமானாலும் கூட, வைரஸ் தாக்கம் உடலில் இருந்து நீங்காது. கொரோனாவும் எபோலா போலவே பரவுமா என்பது உறுதியாகக் கூறமுடியவில்லை. ஆனால் இது ஆபத்தானது.
நோயாளியின் எச்சில், ரத்தம், மலம் மூலமும் கொரோனா பரவும் அபாயம் இருக்கிறது. உடலுறவு மூலம் கொரோனா பரவுவதைத் தடுக்க ஆணுறை பயன்படுத்துவது சிறந்த வழி. ஆனால் கொரோனா பரவும் இந்த காலத்தில் பாதுகாப்பற்ற உடலுறவைத் தவிர்ப்பது நல்லது என டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள்.