தமிழகத்தில் 600 பேருக்கு கொரோனா தொற்று ஊறுதி
1 min read
Coronavirus infects 600 people in Tamil Nadu
8-5-2020
தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஒரே நாளில் 600 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தினமும் மாலையில் தமிழகத்தில் கொரோன பரவில் குறித்து அறிவிக்கப்பட்டு வருகிறது.
நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் 5,409 பேருக்கு வைரஸ் பரவி இருந்தது. இவர்களில் 1,547 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 37 பேர் பலியாகி இருந்தனர்.
இந்தநிலையில், தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து மாநில சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) ஒரே நாளில் 600 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 6,009 ஆக அதிகரித்துள்ளது.
இன்றைய நிலரவப்படி கொரோனா வைரஸ் பரவியவர்களில் 1,605 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடுதிரும்பினார்கள்.
கொரோனா தாக்குதலுக்கு இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டம் வாரியாக…
இன்று கொரோன பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக வருமாறு:-
சென்னை- 399
திருவள்ளூர்-75
கடலூர்-34
செங்கல்பட்டு -26
விழுப்புரம்-21
திருவண்ணாமலை-11
காஞ்சிபுரம்-8
கன்னியாகுமரி-8
நெல்லை-4
விருதுநகர்-3
கிருஷ்ணகிரி-2
தர்மபுரி-2
மதுரை-2
ராமநாதபுரம்-1
தென்காசி-1
தேனி-1
திருப்பதூர்-1
திருச்சி-1
பரிசோதனை அதிகரிப்பு
தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கு பரிசோதனை செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதும் ஒரு காரணம். பரிசோதனை அதிகரிக்கும் பட்சத்தில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை குறித்த வெளிப்படைத்தன்மை மேம்பட்டு வருகிறது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 13 ஆயிரத்து 883 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 600 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 6 ஆகும். இன்று 13 ஆயிரத்து 980 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் தமிழகத்தில் மக்களிடம் இருந்து எடுக்கப்பட்ட பரிசோதனை மாதிரிகளின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 16 ஆயிரத்து 416 ஆக அதிகரித்துள்ளது.
பரிசோதனைகளை அதிகரிப்பதே வைரஸ் பரவும் வேகத்தை கட்டுப்படுத்தும் நடைமுறைகளில் மிகவும் முக்கியமான ஒன்று என உலக சுகாதார அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.