தமிழகத்தில் ஒரே நாளில் 716 பேருக்கு கொரோனா பாதிப்பு; 8 பேர் பலி
1 min read
Corono affects 716 and deth 8 in one day in Tamil Nadu
13-2-5-2020
தமிழகத்தில் ஒரே நாளில் 716 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டை மையமாக கொண்டு இந்த கொரோனா வேகமாக பரவி வருகிறது.
தமிழகத்தில் நேற்று(செவ்வாய்க்கிழமை) மட்டும் புதிதாக 716 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 718 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்களில் கொரோனா உறுதி செய்யப்பட்ட 4 பேரும் அடங்குவர். அந்த 4 பேரும் விமான நிலையத்திலேயே தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களில் 6,520 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,134 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில்
தமிழகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை விவரம் வருமாறு:-
சென்னை – 4,882
செங்கல்பட்டு – 391
அரியலூர் – 344
கோவை – 146
கடலூர் – 396
தர்மபுரி – 5
திண்டுக்கல் – 111
ஈரோடு – 70
கள்ளக்குறிச்சி – 61
காஞ்சிபுரம் – 156
கன்னியாகுமரி – 26
கரூர் – 52
கிருஷ்ணகிரி – 20
மதுரை – 121
நாகப்பட்டினம் – 45
நாமக்கல் – 77
நீலகிரி – 14
பெரம்பலூர் – 132
புதுக்கோட்டை – 6
ராமநாதபுரம் – 30
ராணிப்பேட்டை – 76
சேலம் – 35
சிவகங்கை – 12
தென்காசி – 53
தஞ்சாவூர் – 69
தேனி – 66
திருப்பத்தூர் – 28
திருவள்ளூர் – 467
திருவண்ணாமலை – 105
திருவாரூர் – 32
தூத்துக்குடி – 35
திருநெல்வேலி – 93
திருப்பூர் – 114
திருச்சி – 67
வேலூர் – 34
விழுப்புரம் – 299
விருதுநகர் – 40
விமான நிலைய தனிமைபடுத்தல் – 4
மொத்தம் – 8,718
இறந்தவர்கள் விவரம்
தமிழகத்தில் நேற்று (செவ்வாக்கிழமை) ஒரே நாளில் கொரோனாவுக்கு 8 பேர் இறந்துள்ளனர்.
இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை மாவட்ட வாரியாக விவரம்:-
சென்னை – 39
செங்கல்பட்டு – 4
கோவை – 1
கடலூர் – 1
திண்டுக்கல் – 1
ஈரோடு – 1
காஞ்சிபுரம் – 1
கன்னியாகுமரி – 1
மதுரை – 2
ராமநாதபுரம் – 1
தேனி – 1
திருவள்ளூர் – 3
தூத்துக்குடி – 1
திருநெல்வேலி – 1
விழுப்புரம் – 2
மொத்தம் – 61