June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

அஞ்சலியின் புதிய கெட்டப் -கலாய்க்கும் நெட்டிசன்கள்

1 min read
Anjali’s New Kettup -Netisons tease

கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அஞ்சலி. முதல் படமே பெயர் சொல்லும் படமாக அமைந்ததால் தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்தன. அங்காடி தெரு படத்தின் மூலம் இளம் நடிகர்களின் வரவேற்பையும் பெற்றார்.

இதனால் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் குறிப்பிடத்தக்க நடிகையாக வலம் வந்தார். இடையில் குடும்பத்தாருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சினிமாவில் இருந்து சில காலம் ஒதுங்கி இருந்தார்.

பின்னர் மீண்டும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது வரை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். நீண்ட காலமாக சினிமாவில் இருந்தாலும் தற்போது வரை அவரால் முன்னணி நாயகியாக வலம் வர முடியவில்லை.

அதுமட்டுமில்லாமல் பட வாய்ப்புக்காக ஆடையை குறைக்கும் பழக்கம் மொத்த சினிமா உலகிலும் உண்டு. அந்த வகையில் பொது இடத்தில் அநியாயத்திற்கு தொடையை காட்டிக்கொண்டு குழந்தைகள் போடும் உடையை அணிந்து புகைப்படம் எடுத்த அஞ்சலியை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *