June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

ஊரங்கு மீறல் மூலும் ரூ5.59 கோடி அபராதம் வசூல்

1 min read

5.59 crore in fines for violation of curfew

16-5-2020

ஊரங்கு காலத்தில் கடந்த 52 நாட்களில் ஊரடங்கை மீறியதாக ரூ.5.59 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. சாலையில் திரிந்தவர்கள் உள்பட விதிமுறையை மீறியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஊரடங்கு பிறப்பித்த மார்ச் 23-ந் தேதி முதல் நேற்று வரை (மே மாதம் 15-ந் தேதி) வரையிலான 52 நாட்களில் விதிகளை மீறியவர்கள் மீது போலீசார் 4.46 லட்சம் வழக்குகள் பதிவு செய்தனர். 4.73 லட்சம் பேர் கைது செய்யப்பட்டனர். 3.90 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் இருந்து ரூ. 5.59 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

ஒப்படைப்பு

கைது செய்யப்பட்ட அனைவரும் சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்டவைகளில் 2.90 லட்சம் வாகனங்கள் அதன் உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *