June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

உடல் எடையை குறைத்து ஸ்லிமாக இருக்க 8 பயனுள்ள டிப்ஸ்

1 min read
8 Useful Tips to Lose Weight

உடல் எடையை குறைத்து ஸ்லிமாக இருக்க எட்டு பயனுள்ள டிப்ஸ்…!

உடல் எடையை குறைக்க பல வழிகள் உண்டு. உடற்பயிற்சியில் ஆரம்பித்து உணவு வகைகள் வரை பல விஷயங்கள் மூலம் உடல் எடையை குறைக்க முடியும். ஆனால் உடல் எடை குறைப்பது என சொல்வது சுலபமாக தெரிந்தாலும் அதனை செய்வது கடினமான காரியம் தான். ஆனால் நீங்கள் பெரிதாக கவலைப்பட தேவையில்லை. நீங்கள் என்ன உணவு எடுத்து கொள்ள வேண்டும் என்ன எடுத்து கொள்ள கூடாது என்பதை கவனித்தாலே போதும். இந்திய உணவை எடுத்து கொள்ளும் போது உடல் எடையை குறைக்க ஒரு சில டிப்ஸ் தான் இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம்.

  1. நம் உடலில் இருக்கும் அணுக்களுக்கு போதுமான அளவு சக்தி தேவை. இந்த சக்தியை கார்போஹைட்ரேட்டே வழங்கும். நீங்கள் சாப்பிடும் உணவில் பாதி கார்போஹைட்ரேட்டாக தான் இருக்க வேண்டும். அதிக ஆற்றல் மற்றும் குறைந்த கலோரிகளை கொண்ட பிரவுன் அரிசி, தினை வகைகள், கோதுமை, உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளி கிழங்கு ஆகியவற்றை அதிகமாக சேர்த்து கொள்ளுங்கள்.
  2. தசைகள், சருமம் ஆகியவை வளர்வதற்கு காரணமாக இருப்பது புரதச்சத்து. உடலில் உள்ள திசுக்களை சரி செய்து, உடல் முழுவதும் உள்ள இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இந்தியர்களை பொருத்த வரையில் போதுமான அளவு புரதச்சத்து எடுத்து கொள்ள மறந்து விடுவார்கள். உங்கள் உணவில் 30% புரதச்சத்து இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்.
  3. ஆப்பிள், பிராக்கோலி, ஆளி விதைகள், ஓட்ஸ், பார்லி ஆகிய நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சேர்த்து கொள்ளுதல் அவசியம். சராசரியாக ஒரு மனிதனுக்கு 15 கிராம் நார்ச்சத்து ஒரு நாளைக்கு தேவைப்படுகிறது. நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்து வருவதினால் பசி அடங்கி வயிறு நிரம்பிய ஒரு உணர்வு ஏற்படும்.
  4. உடல் எடை குறைப்பு என்று வரும்போது கொழுப்பு அதற்கு எதிரியாக கருதப்படுகிறது. ஆனால் கொழுப்பில் நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு என இரு வகை உண்டு. நம் உணவில் ஐந்தில் ஒரு பங்கு நல்ல கொழுப்பாக இருக்க வேண்டும். சோயா பீன்ஸ் எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய், ஆலிவ் எண்ணெய், கடுகு எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் ஆகியவற்றில் உடலுக்கு தேவையான பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு, மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு, ஒமேகா 3 ஃபாட்டி ஆசிட் உள்ளது. இவை உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவும்.
  5. ஃபிரஷான பழங்கள் மற்றும் காய்கறிகளில் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அதிக அளவில் உள்ளது. உங்கள் நாளை இவற்றுடன் ஆரம்பிப்பது சிறந்தது. பழங்களை பொருத்த வரை ஆப்பிள், வாழைப்பழம், பப்பாளி, கொய்யாப்பழம், பெர்ரி, தர்பூசணி, லிச்சீ போன்றவை எடுத்து வாருங்கள். வெள்ளரிக்காய், முட்டை கோஸ், கேரட், தக்காளி, கத்திரிக்காய், பாகற்காய், காளான், கீரை போன்ற காய்கறிகளையும் சேர்த்து கொள்ள வேண்டும்.
  6. பூண்டு, இஞ்சி, மல்லி, சீரகம், ஏலக்காய், மிளகு, மஞ்சள், வெந்தயம், துளசி போன்ற மூலிகை மற்றும் மசாலா பொருட்கள் உணவிற்கு சுவை சேர்ப்பது மட்டும் அல்லாமல் உடல் எடையை குறைக்கவும் உதவி புரியும்.
  7. நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடித்து வந்தால் மட்டுமே உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் கழிவுகள் வெளியேறும். எனவே ஒரு நாளைக்கு குறைந்தது 1.5 லிட்டர் தண்ணீர் கட்டாயமாக குடித்து வர வேண்டும்.
  8. காலை உணவை தவிர்க்க கூடாது. பெரிய மீல்களுக்கு இடையே சிறு சிறு மீல்களை எடுத்து கொள்ளுங்கள். காலையில் ஒரு கப் தயிர் எடுத்து கொள்வதன் மூலமாக செரிமானம் நிதானமாகவும் பொருமையாகவும் ஏற்படும். தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னாள் உணவு உட்கொள்ளுமாறு பார்த்து கொள்ளுங்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.