கமலஹாசனுடன் எந்த நெருக்கமான உறவும் இல்லை- பூஜாகுமார்
1 min read
காலம் கடந்த பின்னும் கிசுகிசு மேட்டரில் இன்னும் நம்பர்-1 நடிகராக வலம் வருகிறார் கமலஹாசன். அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை தொடர்ந்து பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார். சமீபத்தில் கமல்ஹாசனுடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்த கௌதமி அவரை விட்டு விலகிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு நடிகர் கமலஹாசனுக்கும் நடிகை பூஜா குமாரும் இடையில் கிசுகிசு இருப்பதாக செய்திகள் கிளம்பியது. அதனை உறுதி செய்யும் விதமாக தொடர்ந்து கமல்ஹாசன் தனது படங்களில் பூஜாகுமாருக்கு வாய்ப்பு கொடுத்து வந்தார். அதுமட்டுமில்லாமல் சில நெருக்கமான காட்சிகளும் அவர்களுக்குள் எடுக்கப்பட்டது. மேலும் கமலஹாசனின் குடும்ப புகைப்படத்திலும் இடம் பெற்றிருந்தார் பூஜாகுமார்.
அதுமட்டுமில்லாமல் பூஜா குமார் கமலஹாசனுடன் நெருங்கி பழகுவது அவரது குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை எனவும், அதனால் தான் கமலின் மகள்கள் தற்போது தனிமையில் வசித்து வருவதாகவும் பல செய்திகள் கிளம்பின. தற்போது வரை அதற்கு கமலஹாசன் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை.

ஆனால் பூஜா குமாரிடம் சமீபத்திய பேட்டி ஒன்றில் அதற்கான கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பூஜாகுமார், கமலஹாசனுடன் விஸ்வரூபம் படத்தில் இருந்து நடித்து வருவதால் அவருடன் நல்ல நட்பு இருப்பதாகவும், அவருடைய உறவினர் தயாரிப்பில் பல படங்களில் நடித்திருப்பதால் அவரது குடும்பத்திற்கும் எனக்கும் நெருங்கிய உறவு இருப்பதாகவும் தலையை சுற்றி மூக்கை தொடும் விதமாக பேசியுள்ளார்.
மேலும் கமலுக்கும் எனக்கும் நட்பைத் தாண்டி வேறு எந்த ஒரு உறவும் கிடையாது எனவும் கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த நெட்டிசன்கள் தொடர்ந்து இருவருக்குள்ளும் தொடர்பு இருக்கிறது என்பதை போல கருத்து தெரிவித்து வருகின்றனர். இது உண்மையா? இல்லையா? என்பதை ஆண்டவர் தான் நிரூபிக்க வேண்டும்.