கொரோனாவுக்கு ஹைராக்ஸி குளோரோகுயின் மருத்தை கொடுக்க வேண்டாம்- உலக சுகாதார மையம் அறிவிப்பு
1 min read
Do not give Hydroxychloroquine injection to Corona – World Health Center announcement
26-5-2020
கொரோனாவுக்கு ஹைராக்ஸி குளோரோகுயின் மருத்தை கொடுக்க வேண்டாம்- உலக சுகாதார மையம் கூறியுள்ளது.
கொரோனாவுக்கு மருந்து
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனாவுக்கு இதுவரை மருந்து ஏதும் அதிகாரப்பூர்வமாக கண்டு பிடிக்கப்படவில்லை. தடுப்பூசியும் கிடையாது.
அதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மலேரியா காய்ச்சலுக்கு கொடுக்கப்டும் ஹைராக்ஸி குளோரோகுயின் மருத்தை கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில் உலக சுகாதார மையம் மலேரியா தடுப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை கொரோனா தொற்றுக்கு கொடுப்பதையும், அது தொடர்பான மருத்துவ பரிசோதனைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி கூறியுள்ளது.
இது தொடர்பாக வீடியோ கான்பரன்சிங் மூலம் செய்தியாளர்களிடம் உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனாம் கூறியதாவது:-
உயிரிழப்பு
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை பயன்படுத்துவதால் அவர்கள் உயிரிழப்பு வாய்ப்பு அதிகரிக்கும். கடந்த வாரம் தி லான்செட் பதிப்பகம் ஒன்று மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இந்த மருந்து பயன்பாட்டை குறைத்து கொள்ள வேண்டும் என நிர்வாக குழு பரிந்துரை செய்துள்ளது. இதனால், கொரோனா தொற்றுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடுப்பதையும், மருத்துவ பரிசோதனைகளையும் நிறுத்தி வைக்க வேண்டும்.
இவ்வாறு டெட்னோம் தெரிவித்தார்.
ஏற்கனவே தி லான்செட் என்ற நிறுவனம் 96 ஆயிரம் பேரிடம் நடத்திய ஆய்வில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரை கொரோனா நோயாளிகளுக்கு எந்த பலனையும் அளிக்கவில்லை என்றும் அதேரேநம் இதய பிரச்சினை மற்றும் சில பக்க விளைவுகளை ஏற்படுத்தியதும் தெரியவந்துள்ளது.