May 12, 2024

Seithi Saral

Tamil News Channel

கொரோனா தனது வீரியத்தை இழந்து வருகிறது; இனி ஆபத்தும் குறைவுதான்

1 min read

Corona is losing its vigor; The longer the risk is reduced

கொரோனா தனது வீரியத்தை இழந்து வருகிறது; இனி ஆபத்தும் குறைவுதான்

1-6-2020

கொரோனா தனது வீரியத்தை இழந்து வருகிறது. இதனால் இனி அதனால் ஆபத்து குறைவாகத்தான் இருக்கும் என்று இத்தாலி டாக்டர் கூறுகிறார்.

கொரோனா

சீனாவில் கொரோன உருவானாலும் அமெரிக்கா, இத்தாலி போன்ற மற்ற நாட்டு மக்கள்தான் அதிக அளவில் பாதிப்பு அடைந்தார்கள். இந்தியாவலும் கொரோனா தொற்று பரவி வந்தாலும் உயிரிழப்பு மற்ற நாடுகளை ஒப்பிடும்போது குறைவுதான்.

வேகமாக பரவி வரும் கொரோனா மக்களை பெரிதும் அச்சம்கொள்ள வைத்துள்ளது. இனி அந்த அளவுக்கு பயன்பட வேண்டாம் என்று இத்தாலியில் உள்ள மூத்த டாக்டர் ஒருவர் கூறுகிறார். அதற்கு காரணம் கொரோனாவின் வீரியம் தற்போது குறைந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பேட்டி

அந்த டாக்டரின் பெயர் ஆல்பர்ரோ ஜாங்க்ரிலோ. இவர் இத்தாலி லோம்பார்டி அடுத்த மிலனில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளித்து வரும் சான் ரபேல் ஆஸ்பத்திரியின் தலைவராக இருக்கிறார். இவர் டெலிவிஷன் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இத்தாலியில் கொரோனா வைரசின் வீரியம் குறைந்து வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன் துணியில் படிந்திருந்த கொரோனா வைரஸ் மாதிரி எடுத்து சோதனை செய்யப்பட்டது. இதனை அடுத்து கடந்த 10 நாட்களாக துணியில் எடுக்கப்படும் மாதிரிகளும் சோதனை செய்யப்பட்டன. ஆரம்பித்தில் இந்த வைரஸ் தொற்று, எண்ணிக்கை அடிப்படையில் கணக்கிட முடியாத அளவில் இருந்தது. ஆனால் பின்னர் அதன் எண்ணிக்கை கணிசமாக குறைந்து உள்ளது.

சில நிபுணர்கள் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலைக்கு வாய்ப்பிருப்பதாக எச்சரித்துள்ளனர். அரசு எச்சரிக்கையுடன், விரைவில் கொரோனாவில் இருந்து வெற்றி பெறுவோம் என கூறுகிறது.

கொரோனா தொற்று மறைந்துவிட்டது என்பதை நிரூபிக்கும் அறிவியல்பூர்வமான ஆய்வறிக்கை ஆதாரங்கள் நிலுவையில் உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வடக்கு இத்தாலியைச் சேர்ந்த இரண்டாவது மருத்துவர் தேசிய ANSA செய்தி நிறுவனத்திடம், கொரோனா வைரஸ் பலவீனமடைவதைக் காண்கிறேன் என்று கூறினார்.

ஜெனோவா நகரில் உள்ள சான் மார்டினோ மருத்துவமனையின் தொற்று நோய்கள் கிளினிக்கின் தலைவர் மேட்டியோ பாசெட்டி கூறும்போது, “இரண்டு மாதங்களுக்கு முன்பு வைரஸ் இருந்த வலிமை இன்றுள்ள அதே வலிமை அல்ல. ” என்றார்.

குறைந்து வரும் இறப்புகள்

இத்தாலியில்இதுவரை கொரோனாவால் 2,32,997 பேர் பாதிக்கபட்டுள்ளனர். 33,415 பேர்உயிரிழந்துள்ளனர். 1,57,507 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மே மாதத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.

வீரியம் குறைவது எப்படி

கொரோனா வைரசின் வீரியம் குறைந்து வருவதாக மூத்த டாக்டர்கள் கூறுவதில் உண்மை இல்லாமல் இல்லை. பொதுவாக கொரோனா பரவ தொடங்கியது முதல் அதற்கு மருந்து இல்லாவிட்டாலும் தங்கள் உடலில் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் முயற்சியில் ஒவ்வொருவரும் ஈடுபட்டனர். இதனால் ஒருவர் உடலக்குள் கொரோனா வைரஸ் புகுந்தாலும் அவர்கள் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியால் கொரோனாவின் வீரியம் குறைத்தான் செய்யும். வீரியம் குறைந்த கொரோனா வைரஸ் அடுத்தவர் உடலுக்குள் செல்லும்போதும் குறைந்த பாதிப்பையே ஏற்படுத்தும். அவரிடம் இருந்து இன்னொருவருக்கு போகும்போது அதன் வீரியம் அதைவிட குறையும். ஒருக்கட்டத்தில் கொரோனா காமடி பீசாக மாறவும் வாய்ப்பு உண்டு.
அதற்காக இப்போது யாரும் அசட்டையாக இருந்துவிடக் கூடாது. சமூக இடைவெளியை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். எதிர்ப்பு சக்தியை உருக்கும் மருந்துகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.