April 28, 2024

Seithi Saral

Tamil News Channel

68 நாட்களுக்குப் பிறகு பஸ்கள் ஓடினாலும் பரிதவிக்கும் கிராம மக்கள்

1 min read

Frontier villagers who are not used to running buses after 68 days

1-6-2020

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களைத் தவிர மற்ற பகுதிகளில் இன்று பஸ்கள் ஒடின. 68 நாட்களுக்கு பிறகு பஸ்கள் ஓடினால் மண்டல எல்லைப் பகுதி மக்கள் மிகவும் பரிதவித்தார்கள்.

பஸ்கள்

கொரோனா பரவலை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பஸ் மற்றும் ரெயில் ஓடாமல் இருந்தனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
தற்பே்ாது ஊரடங்கு 5-வது கட்டமாக இந்த மாதம் முழுவதும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் தமிழகத்தில் பஸ்கள் ஓட அனுமதிக்கப்பட்டது. அதாவது தமிழக பகுதிகள் எட்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 7 மற்றும் 8-வது மண்டலங்களைத் தவிர (சென்னை, செங்கல்பட்டு , காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள்) மற்ற பகுதிகளில் இன்று முதல் பஸ்கள் ஓடும் என்று தமிழக அரசு அறிவித்தது. 50 சதவீத பஸ்கள் மட்டுமே இயங்கும் என்றும் ஒவ்வொரு பஸ்சிலும் 60 சதவீத பயணிகள் மட்டுமே ஏற்றப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்டி இன்று தமிழகத்தில் பஸ்கள் ஓடத் தொடங்கின. குறைந்த அளவு பயணிகளுடன் கடந்த 68 நாட்களாக பஸ்கள இயங்காததால் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பஸ்கள் மட்டுமின்றி கார், டாக்ஸி, ஆட்டோக்களும் இன்று அதிகமாக ஓடின. இதனால் 68 நாட்களுக்குப்பிறகு சாலைகள் களை கட்டத் தொடங்கின. நகரங்களில் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் கூட ஏற்பட்டது.

பரி தவிக்கும் மக்கள்

ஆஸ்பத்திரி மற்றும் நெருங்கிய உறவினர்கள் வீடுகளுக்கு இன்று மக்கள் சென்றுவந்தனர். கொரோனா காரணமாக வெளியூர்களில் தங்கி இருந்தவர்கள் அது ஒரே மண்டலமாக இருப்பின் அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்றனர்.

ஆனால் மண்டல எல்லையில் உள்ள மக்களுக்கு இந்த பஸ்போக்குவரத்து பயன்பட வில்லை என்றே சொல்ல வேண்டும். அவர்கள் பக்கத்து ஊர்களுக்குகூட செல்ல முடியாமல் பெரிதும் அவதி அடைந்தனர்.
மண்டலத்திற்குள் மட்டுமே தற்போது பஸ்கள் இயக்கப்படுகின்றன. அடுத்த மண்டலத்திற்குள் பஸ்கள் செல்லாது. மண்டலம் விட்டு மண்டலம் செல்ல வேண்டுமானால் இ-பாஸ் பெற வேண்டும். அப்படியே பெற்றாலும் ஆட்டோ, கார்களில்தான் செல்ல முடியும். ரெயில் வசதி அந்த அளவுக்கு இன்னும் விடப்படவில்லை.
இதனால் மண்டல எல்லையில் வசிக்கும் மக்கள் பக்கத்து ஊர்களுக்குகூட செல்ல முடியவில்லை. உதாரமாக மதுரை மண்டலம் எல்லையில் கொட்டாம்பட்டி உள்ளது. அந்தபகுதி மக்கள் மதுரைக்கு வருவதைவிட திருச்சிக்கு செல்வதுதான் பக்கம். ஆனால் அதுவேறு மண்டலம். எனவே கொட்டாம்பட்டி மக்களால் திருச்சி மட்டுமல்ல தங்கள் ஊர் அருகே இருக்கும் திருச்சி மாவட்ட ஊர்களுக்குகூட செல்ல முடியாது.
அதேபோல் தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டி மக்கள் அருகே உள்ள சாத்தூர் பகுதிக்கு வர முடியாது. காரணம் இந்த இரண்டு ஊர்களும் வெவ்வேறு மண்டலங்கள். செல்லை மாவட்டம் சிவகரி மக்கள் அருகே உள்ள சேத்தூருக்கு வர முடியாது. காரணம் சேத்தூர் விருதுநகர் மாவட்டம். மண்டலமும் வேறு. இதனால் பஸ்கள் இயங்கினால் எல்லைப்புற மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.