புத்தநினைவுச்சின்னம் சேதம்- பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்
1 min read
Damage of Buddhist Monument – India denounces Pakistan
4-5-2020
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் இடம்பெற்றிருந்த புத்த நினைவுச்சின்னங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
புத்த நினைவுச்சின்னம்
பாகிஸ்தான் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை ஆக்கிரமித்து வைத்துள்ளது. அப்படி ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் கில்ஜித் – பல்திஸ்தான் பகுதியில் பாறைகளில் புத்த மதம் தொடர்பான சிற்பங்கள் செதுக்கி வைக்கப்பட்டு உள்ளன. இந்த புத்த நினைவு சின்னங்கள் பழங்கால சிறப்புகளை விளக்குவதாக உள்ளது.
இந்த நிலையில் இந்த நினைவுச்சின்னங்கள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன. அந்த பாறை சிற்பங்களில், பாகிஸ்தான் மற்றும் இஸ்லாமிய கொடியை வரைந்து வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.
வெளியேற வேண்டும்
இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா கூறியதாவது:-
பாகிஸ்தானில் புத்த சின்னங்கள் சேதப்படுத்தியதற்கு, இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. வல்லுநர் குழுவை அனுப்பி, புத்த நினைவு சின்னங்களை இந்தியா சீரமைக்க உள்ளது.
எனவே பாகிஸ்தான் சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ள கில்ஜித் – பல்திஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பாகிஸ்தான் உடனடியாக வெளியேற வேண்டும் என இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இவ்வாறு கூறினார்.