June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

சென்னையில் இன்று 1072 பேருக்கு கொரோனா

1 min read

corona affected 1070 person in chennai one day

சென்னையில் இன்று 1072 பேருக்கு கொரோனா

4-5-2020

சென்னையில் இன்று மட்டும் 1,072 பேருக்கு கொரோனா உறுதி படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவி வருகிறது. அதிலும் சென்னையில்தான் அதிக அளவு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

தினமும் மாலையில் கொரோனா பரவல் குறித்து தமிழக சுகாதாரத்துறை அறிவித்து வருகிறது.

அதன்படி இன்று(வியாழக்கிழமை) தமிழகத்தில் 1,384 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. . அதில் ஒருவர் குவைத்தில் இருந்தும், 5 பேர் மராட்டிய மாநிலத்தில் இருந்தும், 4 பேர் தெலுங்கானாவில் இருந்தும், ஒருவர் கேரளாவில் இருந்தும் வந்தவர்கள். மற்ற 1,373 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,256 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனா உறுதியானவர்களில் 783 பேர் ஆண்கள், 601 பேர் பெண்கள். இது வரை மொத்தம் 16,964 ஆண்களும், 10,278 பெண்களும், திருநங்கைகள் 14 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 585 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதனால் கொரோனா குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 14901 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில்

சென்னையில் மட்டும் 1072 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 17,609 ஆக அதிகரித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 169 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 44 பேருக்கும், காஞ்சிபுரம். விருதுநகர் மாவட்டங்களில் தலா 8 பேருக்கும், விழுப்புரம், திருச்சி, தூத்துக்குடி, மதுரை ஆகிய மாவட்டங்களில் தலா 7 பேருக்கும், கடலூர், நாகையில் தலா 5 பேருக்கும், திருவண்ணாமலை , ராணிப்பேட்டை மாவட்டங்களில் தலா 4 பேருக்கும், ராமநாதபுரம், தேனி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா 3 பேருக்கும், திருநெல்வேலி, தென்காசி, சேலம், புதுக்கோட்டை, நாமக்கல், தர்மபுரி, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேருக்கும், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா உறுதியானது.

12 பேர் சாவு

கொரோனா பாதிப்பில் தமிழகத்தில் இன்று 12 பேர் இறந்ததுள்ளனர். சென்னையில் 10 பேரும், செங்கல்பட்டு, வேலூரில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து மொத்த உயிரிழப்பு 220 ஆக அதிகரித்துள்ளது.

பரிசோதனை

தமிழகத்தில் இன்று மட்டும் 16, 447 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. தற்போது வரை , 5,44,981 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதேபோல், இன்று வரை 15,991 பேருக்கும், மொத்தம் 5,20,286 பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா பாதித்தவர்களில் 12 வயதுக்கு உட்பட்டோரின் எண்ணிக்கை 1 506 ஆகும். 13 முதல் 60 வயது வரை உடையவர்களில் 23,084 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 2,712 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *