சசிகலா எப்போது விடுதலை செய்யப்படுவார்?- சிறை துறை அதிகாரி விளக்கம்
1 min read
When will Sasikala be released?
12-6-2020
சசிகலா எப்போது விடுதலை செய்யப்படுவார் என்பது குறித்து சிறைத்துறை அதிகாரி பதில் அளித்துள்ளார்.
சசிகலா
சொத்துக் குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என வழக்கை விசாரித்த கர்நாடக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
வழக்கின் தீர்ப்பு வெளியாவதற்கு முன்பே ஜெயலலிதா இறந்துவிட்டார். ஆனாலும் தீர்ப்பில், ஜெயலலிதாவிற்கு ரூ. 100 கோடி அபராதம் விதித்துச் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும் தலா ரூ. 10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
கோர்ட்டு உத்தரவையடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். சசிகலாவிற்கு கைதி எண்: 9234 கொடுக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா சிறைக்கு சென்ற நாளில் இருந்தே அவர் விரைவில் விடுதலை ஆகிவிடுவார் என்று அவ்வப்போது தகவல்கள் பரவிக் கொண்டே வருகிறது.
ஜெயலலிதாவின் தண்டனை காலம் வருகிற 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைகிறது.
விடுதலை எப்போது?
ஆனால் அவர்கள் அதற்கு முன்பாகவே விடுதலை ஆக வாய்ப்பு உள்ளதாக இப்போதும் தகவல் பரவி வருகிறது.
இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் டி.நரசிம்மூர்த்தி, சசிகலா எப்போது விடுதலை செய்யப்படுவார் என்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டிருந்தார். அவரது இந்த கேள்விக்கு கர்நாடக அரசின் சிறைத்துறை பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறை சூப்பிரண்டு லதா பதிலளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
பொதுவாக ஒரு தண்டனை கைதியை விடுதலை செய்ய பல்வேறு அம்சங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. உதாரணத்திற்கு அபராத தொகை அடிப்படையில் கைதியை விடுதலை செய்யும் தேதி மாறுபடும். அதனால் சசிகலா விடுதலை குறித்து உங்களுக்கு எங்களால் சரியான தேதியை கொடுக்க முடியவில்லை.
இவ்வாறு லதா தெரிவித்துள்ளார்.
நன்னடததை காரணமாக சில கைதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்படலாம். மேலும் ஒவ்வொரு கைதிக்கும் குறிப்பிட்ட காலம் பரோல் வழங்கப்படும். பரோரில் வெளியே வராமல் இருந்திருந்தால் அது தண்டனை காலத்தில் குறைக்கப்படும். அப்படி பயன்படுத்தப்படும் போது ஒருவேளை
சசிகலா
ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாதத்தில் விடுதலையாக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சசிகலா விடுதலைக்கு பிறகு தமிழக அரசியிலிலும் மாற்றங்கள் வரலாம் என்றும் பேசப்படுகிறது-
——
-டி. பாலசுப்பிரமணியன் , மூத்த பத்திரிகையாளர்