June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

பெரிய சம்பளத்தில் பிரபல டிவி சீரியலுக்கு வரும் யாஷிகா ஆனந்த்

1 min read

20.6.2020

Yashika Anand is coming to TV serial

சினிமா படப்பிடிப்புகள் தற்பொழுது ஆரம்பிக்குமா என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது. அதுவரையில் வெறும் இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தையும் வீடியோவையும் வெளியிட்டு கொண்டிருந்தால் சரிவராது என முடிவு எடுத்திருக்கிறார் யாஷிகா ஆனந்த்.

யாஷிகா ஆனந்தின் இந்த முடிவு வீட்டில் இருக்கும் வாலிப இளைஞர்களுக்கு கொண்டாட்டம் தான். முக்கியமாக நடிகைகளுக்கு வயசுதான் பெரும் மூலதனமே அந்த வயதிற்குள் தேவையான வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இளமை போவதற்குள் பணம் சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்பது அவர்களது நம்பிக்கை.

வயது போனால் இளமை போனால் வாய்ப்புகளும் குறைவாகும் எனவே புத்திசாலித்தனமாக யாஷிகா ஆனந்த் சினிமாவை மட்டும் நம்பாமல் சீரியலிலும் குதித்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில் யாஷிகா ஆனந்த் நடிக்கப்போகிறார். அதற்கு அவர் வாங்கும் சம்பளம் தான் முன்னணி நடிகைகளை ஓரங்கட்ட வைக்கிறது.

அதாவது ஒரு எபிசோடுக்கு 1.5 லட்ச ரூபாய் பணம் வாங்குகிறார். வெறும் 30 நாட்கள் மட்டும் நடித்தாலே 45 லட்சம் வரும். மிக நீண்ட எபிசோட் என்பதால் பாக்கி நாட்களை நீங்களே கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்.

கொரோனா பிரச்சனை முடிவதற்குள் வயது முடிந்து விடும் என சரியாக உணர்ந்து செயல்படுகிறார் யாஷிகா ஆனந்த். அவருக்கு சரியாக நடந்தால் இன்னும் சில பல நடிகைகள் வர ரெடியாக இருக்கிறார்களாம்.

கொரோனாவிற்கு பயந்து வெளியில் செல்லாமல் இருக்கும் இளைஞர்கள், யாஷிகாவை வைத்து வீட்டிலேயே இருக்க வைக்க திட்டம் போட்டு உள்ளார்கள் என நெட்டிசன்கள் ஆளாளுக்கு ஒரு கமென்ட் அடித்து வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *