May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

தோழிக்கு கொரோனா -கலக்கத்தில் நடிகை

1 min read

26.6.2020

Actress Samantha in fear of Corona for girlfriend

தமிழ் தெலுங்கு சினிமாக்களில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அந்த வகையில் அடுத்தடுத்த அவரது நடிப்பில் வெளிவர பல படங்கள் வெயிட்டிங்.

இந்நிலையில் சமீபத்தில் தனது தோழி ஒருவருக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் சமந்தா. இதற்கு பல கமெண்ட்டுகள் குவிந்தன.

இந்நிலையில் சமந்தாவின் தோழிக்கு கொரானா தொற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மிகவும் கலக்கத்தில் உள்ளாராம் சமந்தா. தோழிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தனக்கும் வந்துவிடுமோ என்ற பயத்தில் உள்ளாராம்.

அதுமட்டுமில்லாமல் வீட்டிற்குள்ளேயே தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. யோகா புகைப்படங்கள் வெளியிடுவதுகூட பயத்தை வெளிக்காட்டாமல் இருப்பதற்காகத்தானாம்.

வீட்டிலேயே தனியாக ஒரு மருத்துவரை வைத்து அவ்வப்போது தனது உடலை பரிசோதித்துக் கொண்டிருக்கிறாராம் சமந்தா. வெளியில் தெரிந்தால் பெரிய பிரச்சனையாகி விடும் என பொத்திப் பொத்தி பாதுகாத்து வருகிறார்களாம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.