May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் ஒரே நாளில் 17,296 பேருக்கு கொரோனா; 407 பேர் சாவு

1 min read

17.296 people affected for Corona and death 407

26-6-2020

இந்தியாவில் நேற்று ஓரே நாளில் 17,296 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 407 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.

17,296 பேருக்கு கொரோனா

இந்தியாவில் பரவி வரும் கொரோனா நிலவரம் பற்றி தினமும் காலையில் மத்திய சுகாதார அமைச்சகர் தகவலை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று காலை வெளியிட்ட தகவல் வருமாறு-

இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று ஒரே நாளில் 17,296 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலும் இந்தியாவில் இதுவரை மொத்தம் 4,90,401 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மட்டும் கொரோனாவுக்கு 407 பேர் இ,றந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 15301 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 3.1 சதவீதமாக உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் இதுவரை 2,85,637 பேர் குணமடைந்துள்ளனர். இவர்களில் நேற்று மட்டுமு் 13940 பேர் குணமடைந்திருக்கிறார்கள். குணமடையும் விகிதம் 58.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 1,89,463 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் 147741 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் 73780 பேருக்கும், தமிழகத்தில் 70977 பேருக்கும், குஜராத்தில் 29520 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலம் வாரியாக…

மாநிலம் வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வருமாறு:-

தமிழ்நாடு – 70977
தெலுங்கானா – 11364

அந்தமான் நிகோபார் தீவுகள் – 59
ஆந்திர பிரதேசம் – 10884
அருணாச்சல பிரதேசம் – 160
அசாம் – 6321
பீகார் – 8473
சண்டிகர் – 423
சத்தீஸ்கர் – 2452
தாதர் மற்றும் நாகர் ஹவேலி – 155
டெல்லி – 73780
கோவா – 995
குஜராத் – 29520
அரியானா – 12463
இமாச்சல பிரதேசம் – 839
ஜம்மு – காஷ்மீர்- 6549
ஜார்க்கண்ட் – 2262
கர்நாடகா – 10560
கேரளா – 3726
லடாக் – 941
மத்திய பிரதேசம் – 12596
மகாராஷ்டிரா – 147741
மணிப்பூர் – 1056
மேகாலயா – 46
மிஜோரம் – 145
நாகலாந்து – 355
ஒடிசா – 5962
புதுச்சேரி – 502
பஞ்சாப் – 4769
ராஜஸ்தான் – 16296
சிக்கிம் – 85
திரிபுரா – 1290
உத்தரகாண்ட் – 2691
உத்தர பிரதேசம் – 20193
மேற்கு வங்காளம் – 15648

மாநிலவாரியாக மறுகூட்டலுக்கு உட்படுத்தப்பட்ட நோயாளிகள்-8123

மொத்தம் – 490401.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.