June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் ஒரே நாளில், 19,906 பேருக்கு கொரோனா

1 min read

19,906 people affected for Corona in India one day

28-6-2020

இந்தியாவில் ஒரே நாளில், 19 ஆயிரத்து, 906 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 5,28,859 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 410 பேர் கொரோனாவுக்கு இறந்தள்ளனர். இதனால் கொரோனாவால இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

இந்தியாவல் பரவி வரும் கொரோனா பற்றிய கதவல்களை தினமும் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம், வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் நேற்று (சனிக்கிழமை) ஒரே நாளில், 19 ஆயிரத்து, 906 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 5 லட்சத்து, 28 ஆயிரத்து ,859 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டு தற்போது 2 லட்சத்து, 3 ஆயிரத்து 051 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 3 லட்சத்து, 9 ஆயிரத்து 713 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

410 பேர் சாவு

இந்தியா முழுவதும் நேற்று ஒரே நாளில் 410 பேர் கொரோனாவுக்கு இறந்தள்ளனர். இதனால் கொரோனாவால் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 095 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

நேற்று வரை மொத்தம் 82 லட்சத்து 27 ஆயிரத்து 802 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதல் நேற்று மட்டும் (சனிக்கிழமை) 2 லட்சத்து 31 ஆயிரத்து 95 பரிசோதனைகள் நடந்துள்ளளன.

கொரோனா பாதிப்பில் மராட்டிய மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் 1, 59, 133 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2-வது இடத்தில் டெல்லி உள்ளது. அந்த மாநிலத்தில் 80,188 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3-வது இடத்தில் தமிழகம் உள்ளது. இங்கு 78, 335 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாநில வாரியாக

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையும் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் (அடைப்புக்குறிக்குள்) வருமாறு:-

மராட்டியம் 1,59, 133 ( 7,273)
டெல்லி 80,188 (2,558)
தமிழ்நாடு 78,335 (1,025)
குஜராத் 30,709 (1, 789)
உத்தரபிரதேசம் 21, 549( 649)
ராஜஸ்தான் 16,944 (391)
மேற்கு வங்காளம் 16, 711 ( 629)
தெலுங்கானா 13,436( 243)
அரியானாவில் 13,427 ( 218)
மத்திய பிரதேசம் 12,965 ( 550)
ஆந்திரா 12,285 (157)
கர்நாடகம் 11, 923 (191)
பீகார் 8,931 ( 59 )
காஷ்மீழ் 6, 966 ( 93)
அசாமு் 6,816 ( 9)
ஒடிசா 6,350 ( 18 )
பஞ்சாப் 5, 056 (128)
கேரளா 4,071 (22)
உத்தரகாண்ட் 2,791 (37)
சத்தீஸ்கர் 2,545 (13)
ஜார்கண்டு 2,339 (12)
திரிபுரா 1,334 ( 1 )
கோவா 1,128 ( 2 )
மணிப்பூர் 1,092 (0)

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.