June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

நாசா வெளியிட்ட சூரியனின் வீடியோ படம்

1 min read

Nasa release solar video

27-6-2020

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா சூரியனின் புதிய படங்களை வெளியிட்டுள்ளது. இந்தப் படங்கள் கடந்த 10 ஆண்டுகளில் சூரியனின் போக்கை நாசாவின் செயற்கைக்கோள் படம் பிடித்ததாகும்.

சூரியன் பற்றி ஆராய்ச்சி

பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றி வருகின்றன.  அந்தக் கிரகங்கள் அனைத்தும் சூரியனில் இருந்து சிதறிய துண்டுகள் என்று கூறப்படுகிறது.

ஆனாலும் சூரியன் பற்றிய ஆராய்ச்சியை உலக அளவில் விஞ்ஞானிகள் தொடர்கிறார்கள்.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவும் சூரியனை பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது.

இதற்காக நாசா “சோலார் டைனமிக்ஸ் அப்சர்வேட்டரி” என்று அழைக்கப்படும் செயற்கை கோளை அனுப்பி உள்ளது. இந்த செயற்கைக்கோள் பல ஆண்டுகளாக வெள்ளி கிரகம் மற்றும் சூரியன் ஆகியவற்றை மிகவும் கவனமாக கண்காணித்து வருகிறது.

அந்த செயற்கை கோள் சூரியனை பல்வேறு கோணங்களில் படம் எடுத்து அனுப்பி உள்ளது. கடந்த 2010ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டுவரை எடுக்கப்பட்ட படங்களை இப்போது நாசா வெளியிட்டு உள்ளது.

இந்த 10 ஆண்டுகளில்  எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள், சூரியனின் பல ஒளி மாற்றங்கள் மற்றும் பரிணாமங்களைக் காட்டுகிறது.

இந்த 10 ஆண்டுகளில் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை என்ற விகிதத்தில் இந்த செயற்கைக்கோள் படம் பிடித்துள்ளது. இவ்வாறாக நான்கரை கோடி புகைப்படங்கள் பிடிக்கப்பட்டுள்ளன.

வீடியோ

இந்த புகைப்படங்கள் தொகுக்கப்பட்டு தற்போது ஓர் ஆவணப்படம் போல நாசாவால் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தப் புகைப்படத் தொகுப்பு ஓர் வீடியோ போல காட்சியளிக்கிறது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சூரியனின் காந்த விசை 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறும். அப்போது சூரியனின் வட மற்றும் தென் துருவங்கள் எதிரெதிராக மாறும். இந்த புகைப்படங்கள் தற்போது மிக அதிக ரெசல்யூஷனில் தெளிவாக எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

அனிமேஷன்

இந்தப் புகைப்படத் தொகுப்பு 61 நிமிட வீடியோவாக ஓடுகிறது. இதில் எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் அனிமேஷன் போல தத்ரூபமாக உள்ளன. இது பார்வையாளர்களை வியக்கவைத்துள்ளது. இந்தப் புகைப்படங்கள் 17.1 நானோமீட்டர் அலைநீளத்தில் எடுக்கப்பட்டுள்ளன. 2016 -ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தொழில்நுட்ப கோளாறால் சில படங்கள் பதிவாகாமல் முழுவதுமாக கருப்படித்துக் காட்சி அளிக்கிறது

இது கற்பனையாக உருவாக்கப்பட்ட வீடியோ என்றும் சிலர் கூறுகிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *