October 4, 2024

Seithi Saral

Tamil News Channel

இரைப்பை புண் ஏன் உண்டாகிறது? காரணத்தை அறிவோமா…

1 min read

இரைப்பை புண் ஏற்படக் காரணங்கள்

Why does gastric ulcer occur? Do you know the reason …

`நொறுங்கத் தின்னவனுக்கு நூறு வயது’ என்பார்கள்.

ஆனால் இன்றைய வாழ்க்கையில் யார் அமைதியாக உட்கார்ந்து மென்று தின்கிறார்கள். யாரும் சரியான நேரத்தில் உணவு உண்பதில்லை. இரவுக்கு கடைகளில் இரண்டு மணிக்கு கூட உண்பவர்களைப் பார்க்கிறோம்.

அதனால் நாம் ஓய்வு கொடுக்காத வயிறு நமக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்து விடுகிறது. குடல்புண் உள்ளவர்களுக்கு மேல்வயிற்றில் வலி, குமட்டல், வாந்தி, வாயில் புளிப்பு நீர் ஊறல், நெஞ்சு எரிச்சல் ஆகியவை ஏற்படும்.

இரைப்பை புண் ஏற்படக் காரணங்கள்..

1) எளிதில் ஜீரணமாகாத உணவுப் பொருட்களை அளவிற்கு அதிகமாக உண்பது.

2) பட்டினி கிடப்பது.

3) குறிப்பிட்ட நேரத்தில் உணவு உட்கொள்ளாமல் நேரம் தவறி சாப்பிடுவது.

4) மிகச் சூடான பானங்களை அருந்துவது

5) சூடான உணவுப் பொருட்களை உண்பது.

6) காரமான மசாலா கலந்த உணவுகளை உண்பது

7) சத்தான உணவுவகைகளை அதிகமாக உணவில் சேர்க்காதது. குடலில் கிருமி உடையவர்கள்

8) மது அருந்துதல், புகை பிடித்தல், புகையிலை முதலியவைகளை அளவிற்கு அதிகமாக பயன்படுத்துதல்

9) கல், மண், தூசி மற்றும் கலப்படங்கள் கலந்த அசுத்தமான உணவுகளை உண்பது.

10) சில வகை மருந்துகளை வெகுகாலமாக மருத்துவரின் ஆலோசனையின்றி உண்பது மேலும் அதிக கவலை, மன அழுத்தம், கோபம் கொள்வது போன்றவைகளிலும் அல்சர் ஏற்படுகிறது.

உணவு முறை..

  1. காபி, டீ, போன்றவைகளை அருந்தக் கூடாது.
  2. மது அருந்துதல், புகை பிடித்தலை அரவே விட வேண்டும்.
  3. நேரம் தவறாமல் குறிப்பிட்ட நேரத்தில் உண்ண வேண்டும்.
  4. உணவில் அதிகம் காரம் சேர்க்கக்கூடாது.
  5. குறுகிய இடைவெளியில் அடிக்கடி மோர், இளநீர் ஏதாவது அருந்தலாம்.
  6. உணவில் மணத்தக்காளிக் கீரை, அகத்திக் கீரை ஆகியவைகளை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  7. காய்கறிகளில் எளிதில் செரிக்கும் கத்தரிப்பிஞ்சு வெண்டைப்பிஞ்சு, வாழைப்பூ, வாழைத்தண்டு, புடலம் பிஞ்சு ஆகியவைகளை கூட்டு செய்து சாப்பிடலாம்.
  8. எளிதில் செரிக்கும் வாழைப்பழம், ஆப்பிள் சாறு போன்றவைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.