April 28, 2024

Seithi Saral

Tamil News Channel

நெய்வேலி அனல் மின்நிலையத்தில் பாய்லர் வெடித்து 7 பேர் சாவு

1 min read
Seven people die for boiler explosion in Neiveli

1-7-2020
நெய்வேலி அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து 7 பேர் பரிதாபமாக இறந்து போனார்கள். 16 பேர் காயம் அடைந்தனர்.

பாய்லர் வெடித்து 7 பேர் சாவு

கடலூர் மாவட்டம் நெய்வேலி யில் அனல்மின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இரண்டாவது அனல்மின் நிலையத்தில் 5வது யூனிட்டில் உள்ள ஒரு பாய்லர் நேற்று திடீரென்று வெடித்து தீவிபத்து ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த பயங்கர விபத்தில் இந்த சம்பவத்தில் 7 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்து போனார்கள். 16 பேர் காயமடைந்துள்ளனர்.

அங்கு வேலை பார்த்த சிலரை காணவில்லை என்று கூறப்படுகிறது. அவர்கள் கதி என்னவென்று உடனடியாக தெரயவில்லை.

தொடரும் விபத்துக்கள்

நெய்வேலி எல்.ஐ.சி.யில் கடந்த மே மாதம், 6-வது யூனிட்டில் பாய்லர் வெடித்ததில் 5 பேர் உயிரிழந்தனர். இப்போது மீண்டும் ஒரு பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டு உள்ளது.

இப்போது நடந்த விபத்தில் இறந்தவர்களுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் “நெய்வேலியில் உள்ள என்எல்சி அனல்மின் நிலைய விபத்தில் தொழிலாளர்கள் இறந்தது வேதனை அளிக்கிறது. மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக முதல்-அமைச்சர் பழனிசாமியிடம் தெரிவித்தேன். சம்பவ இடத்தில் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினர், மீட்பு பணிகளில் உதவி வருகின்றனர்.” என்று கூறியிருக்கிறார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ரூ.3 லட்சம் உதவி

நெய்வேலி அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்ததில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். அவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும். படுகாயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டேன். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.