May 11, 2024

Seithi Saral

Tamil News Channel

2.8 கி.மீ. நீளமுள்ள நீண்ட சரக்கு ரெயிலை இயக்கி இந்தியா சாதனை

1 min read

2.8 KM leathy train in India

2.8 கி.மீ. நீளமுள்ள நீண்ட சரக்கு ரெயிலை இயக்கி இற்தியா சாதனை

3-7-2020

இந்தியாவில் 2.8 கிலோ மீட்டர் நீளமுள்ள சரக்கு ரெயில் இயக்கப்பட்டது. இதில் 251பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன.

நீளமான ரெயில்

தென்கிழக்கு மத்திய ரெயில்வேயின் நாக்பூர் கோட்டத்தில் நிலக்கரி, இரும்புத் தாது ஏற்றிச் செல்ல பயன்படும் சரக்கு பெட்டிகளைக் கொண்ட 4 ரெயில்களை ஒன்றாக இணைத்து 2.8 கி.மீ., கொண்ட மிக நீளமான ரெயில் உருவாக்கப்பட்டது. இந்த ரெயிலில் மொத்தம் 251 காலி சரக்கு பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன.
இந்த ரெயிலுக்கு 4 ஜோடி மின்சார என்ஜின்கள், 4 கார்டு வேன் ஆகிய இணைக்கப்பட்டிருந்தன. இந்த நீண்ட ரெயிலுக்கு “சேஷ்னாக்” என பெயரிடப்பட்டுள்ளது. இதனை தென்கிழக்கு மத்திய ரெயில்வே இயக்கி சாதனை படைத்தது.

மத்திய மந்திரி

ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் இந்த ரெயில் பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் , ‘”இந்திய ரெயில்வேயின் இந்த சாதனை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்தில் அதிக அளவிலான சரக்குகளை கொண்டு செல்ல வழிவகை செய்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.