June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

“டிக்-டாக்” வுக்கு மாற்றாக வருகிறது “ரீல்ஸ்”

1 min read


“Reels” substituted for “tick-talk”

6-7-2020

இந்தியாவில் டிக்-டாக் தடை செய்யப்பட்ட நிலையில் புதிதாக ‘ரீல்ஸ்’ என்ற செயலி விரைவில் வர உள்ளது.

டிக்-டாக்

இணையத்தில் தப்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து இழுத்துள்ளது, டிக்-டாக் என்னும் செயலி.

கல்வான் பள்ளத்தாக்கு நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, சீனாவின் 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதில் டிக் டாக், ஹலோ, லைக், ஷேர் இட் உள்பட பல செயலிகள் பிரபலமானவை.

டிக்-டாக் தடை செய்யப்பட்டதால் பல இளைஞர்கள் பெரிதும் கவலை கொண்டுள்ளனர். இந் த நிலையில்
டிக்டாக் போலவே, ‘ரீல்ஸ்’ என்ற செயலியை இன்ஸ்டாகிராம் இந்தியாவில் களமிறக்க உள்ளது.

பேஸ்புக்கால் நிர்வகிக்கப்படும் இன்ஸ்டாகிராம், கடந்த ஆண்டு ‘ரீல்ஸ்’சை அறிமுகப்படுத்தியது. டிக் டாக் போலவே, பின்னணி இசையில் 15 நொடிகள் ஓடும் வீடியோவில் நடிக்கலாம். பிரேசிலில் சோதனை முயற்சியில் அறிமுகமாக இந்த ‘ஆப்’, பிரான்ஸ், ஜெர்மனியிலும் பின்னர் அறிமுகமானது.

‘ரீல்ஸ்’சை, இந்தியாவில் களமிறக்குவது குறித்து, பேஸ்புக் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘மேம்படுத்தப்பட்ட ‘ரீல்ஸ்’ வசதியை சில நாடுகளில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். எந்தெந்த நாடுகளுக்கு இது அறிமுகப்படுத்தப்பட உள்ளது எனவும், எப்போது அறிமுகம் எனவும் உறுதி செய்யப்படவில்லை’ என்றார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.