June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

நித்யா மேனனா இப்படி நடித்துள்ளார்? – ரசிகர்கள் கொதிப்பு

1 min read


Nithya Menon has acted so obscenely? – Fans boil

16-7-2020

நடிகை நித்யா மேனன் வெப் தொடர் ஒன்றில் ஆபாசமாக முத்தம் கொடுக்கும் நடித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் கொதிப்படைந்து உள்ளனர்.

நடிகை நித்யா மேனன்

நடிகை நித்யா மேனன் பெங்களூருவில் ஒரு மலையாளக் குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை கோழிக்கோட்டையும் தாயார் பாலக்காட்டையும் சேர்ந்தவர்கள்.
நித்யாமேனன் மணிப்பால் பல்கலைகழகத்தில் இதழியல் படித்திருக்கிறார். அவருக்கு சினிமா நடிகை ஆவதில் விருப்பம் இல்லாமல் இருந்தது. பத்திரிக்கையாளராக தான் இருக்க விரும்பியதாக ஒரு தொலைகாட்சி பேட்டியில் கூறியிருந்தார்.
ஆனால் பிறகு பத்திரிக்கை துறையில் இருந்த விருப்பம் குறைந்ததினால் புனே திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவாளர் படிப்பை படித்து முடித்தார்.

இவர் தமிழில் நூற்றெண்பது, வெப்பம்
உருமி, மாலினி 22 , பாளையங்கோட்டை,
ஓ காதல் கண்மணி, மெர்சல், காஞ்சனா 2, 24, இருமுகன், சைக்கோ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கில் ஓகே கண்மணி, மள்ளி மள்ளி இதி ரானி ரோஜு ஆகிய படங்களில் நடித்த இருக்கிறார்.

பெண்ணுக்கு முத்தம்

நித்யா மேனன் தமிழில் நடத்த படங்களில் அழகான தோற்றத்தில் குடும்ப பெண்களை கவரும் விதத்தில் நடித்திருந்தார். இவர் கவர்ச்சியாக இதுவரை நடிக்காத நிலையில் வெப்தொடர் ஒன்றில் பெண் ஒருவருக்கு உதட்டுடன் உதடு முத்தம் கொடுக்கும் லிப்லாக் காட்சியில் நடித்துள்ளார்.
இது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன் நடித்து வரும் ’ப்ரீத்’ என்ற வெப் தொடரில் நித்யா மேனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த தொடரின் இரண்டாவது எபிசோடில் நித்யா மேனன் லெஸ்பியனாக நடித்து இருக்கிறார். அவர் தன்னுடன் நடித்த சுருதி என்ற நடிகைக்கு உதட்டுடன் உதடு சேர்த்து லிப்லாக் முத்தம் கொடுக்கும் காட்சியும் அதன் பின் இருவரும் ஆடைகளை களைந்து கட்டி பிடிப்பது போன்ற காட்சியும் இடம் பெற்று இருக்கும். இதை பார்த்து சிலர் ரசித்தாலும் பலரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

திரைப்படங்களில் கவர்ச்சியாக கூட இதுவரை நடித்திராத நித்யா மேனன், எப்படி லிப் லாக் முத்தக்காட்சியில் நடித்து உள்ளார் என்று ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நித்யா மேனன் கருத்து

இதுபற்றி நித்யா மேனன் கூறும்போது, “நான் ரசிகர்களை திருப்தி படுத்த நடிக்கிறேன் என்று சொல்வதைவிட இது ஒரு சவாலான கேரக்டர். அதனால் அதை ஏற்று நடித்து இருக்கிறேன். கதைக்கு தேவையான காட்சி. தொடரை பார்ப்பவர்களுக்கு இதன் முக்கியத்துவம் தெரியும்” என்று கூறுகிறார்.

திரைப்படங்கள் போன்று ஓடிடி தளத்திற்கு சென்சார் இல்லாததால் இது போன்ற காட்சி அமைக்கப்படுவதாகவும், ஓடிடி தளத்தில் பெரும்பாலும் இளைஞர்கள் மட்டுமே பார்ப்பதால் அவர்களை கவர்வதற்காக இதுபோன்ற காட்சிகள் அதிகம் வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
சினிமா படங்களில் இப்படிப்பட்ட காட்சியை கண்டிப்பாக அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் வெப் தொடரில் இதுபோன்ற காட்சிகள் இடம் பெறுகின்றன. அதற்கும் சென்சார் வந்தால் நல்லது. காரணம் இப்போது வெப் தொடரை பெண்களும் பார்க்கத் தொடங்கி விட்டார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.