தி.மு.க. எம்.எல்.ஏ கணேசனுக்கு கொரோனா
1 min readDMK MLA Ganesan affected for Corona
18-7-2020
திட்டக்குடி எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனாவுக்கு எதிராக போராடிவரும் மருத்துவர்களையும் அது தாக்கி வருகிறது. மேலும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டவர்களை தொடர்ந்து கொரோனா பதம் பார்த்து வருகிறது.
ஏற்கனவே மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சிகிச்சைக்கு பின்னர் பூரண குணமடைந்தனர்.
தற்போது தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தி.மு.க. எம்.எல்.ஏ.
இந்த நிலையில், கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட உள்ளார்.
போலீஸ் துணை கமிஷனர்
சென்னையில் போலீஸ் துணை கமிஷனர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் நுங்கம்பாக்கம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அந்த துணை கமிஷனரின் கார் டிரைவருக்கு ஏற்கெனவே கொரோனா இருந்தது. அவரிடம் இருந்து அதிகாரிக்கும் கொரோனா தொற்று பரவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.