இந்தியாவில் ஒரே நாளில் 38,902 பேருக்கு கொரோனா 543 பேர் சாவு
1 min readIN India 38.902 person affected for Corona and death one day
19-7-2020
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 38,902 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 543 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
38,902 பேருக்கு கொரோனா
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த விவரத்தை மத்திய சுகாதார அமைச்சகம் தினமும் காலையில் வெளியிட்டு வருகிறது. இன்று காலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் நேற்று(சனிக்கிழமை)) ஒரே நாளில், 38,902 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டது. இதனால்,கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை,10,77,618 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 543 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கையும் 26,816 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டு இதுவரை 6,77, 423 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 3732,379 பேர் தற்போது பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மாநிலம் வாரியாக…
கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையும் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையும்(அடைப்புக்குறிக்குள்) மாநிலம் வாரியாக வருமாறு:-
மராட்டியம் 3,00, 937 ( 11,596)
தமிழ்நாடு 1,65,714 ( 2,403)
டெல்லி 1,21,582 ( 3,597)
கர்நாடகம் 59,652 (1,240)
குஜராத் 47,390 ( 2,122)
உத்தரபிரதேசம் 47,036 (1,108)
தெலுங்கானா 43,780 (409)
ஆந்திரா 44,609 (586)
மேற்குவங்காளம் 40,209 (1,076)
ராஜஸ்தான் 28.500 (553)
அரியானா 25,547 (344)
மத்திய பிரதேசம் 21,763 (706)
பீகார் 25,136 (208)
அசாம் 22,918 (53)
ஒடிசா 16,701 (86)
காஷ்மீர் 13,198 ( 236)
பஞ்சாப் 9,792 ( 246)
கேரளா 11,659 (40)
சதீஷ்கர் 5,233 (24)
உத்ரகாண்ட் 4,276 (52)
ஜார்க்கண்ட் 5,342 (46)
கோவா 3,484 (21)
திரிபுரா 2,654 (5)
மணிப்பூர் 1,891 (0)
இமாச்சல பிரதேசனம் 1,457 (11)
லடாக் 1,159 (1)
புதுச்சேரி 1,743 (22)
நாகலாந்து 978 (0)
சண்டிகர் 700 (12)
அருணாசல பிரதேசம் 650 (3)