கொரோனாவை கட்டுப்படுத்த கைகொடுக்கவில்லை- கர்நாடகத்தில் ஊரடங்கு நீக்கம்
1 min read
கர்நாடகத்தில் பொது முடக்கம் நீக்கம்: முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு
Does not help control the corona-Curfew lifted in Karnatakaபெங்களூரு: கர்நாடகத்தில் பெங்களூரு மற்றும் எந்தப்பகுதியிலும் பொதுமுடக்கம் இல்லை, நீக்கப்படுவதாக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், இன்று மாநில மக்களிடையே முதல்வர் எடியூரப்பா உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது, மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. கர்நாடகத்தில் நாளை 22ம் தேதி முதல் எந்தவிதமான ஊரடங்கும் கிடையாது. பொருளாதாரம் மிகவும் முக்கியம் என்பதால் மக்கள் பணிக்குச் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. சீரான பொருளாதாரத்தை நிலைநாட்டிக் கொண்டே, கொரோனாவுக்கு எதிரான போரைத் தொடருவோம்.
கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு கைக்கொடுக்காது. பெங்களூரு மட்டும் அல்ல, மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் பொதுமுடக்கம் இல்லை. அதே சமயம், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்படும்.
மூத்த குடிமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று நான் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். குழந்தைகளை மிகவும் கவனமாக பராமரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.