இந்தியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு முக்கியமானது; அமெரிக்க மந்திரி பேச்சு
1 min read
Security cooperation with India is important; US minister
21-7-2020
இந்தியாவுடனான பாதுபாப்பு ஒத்துழைப்பு முக்கியமானது என்று அமெரிக்கா கூறியுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்காவின் பாதுகாப்பு மந்திரி மாஸ்க் டி எஸ்பர்கூறியதாவது:-
பாதுகாப்பு ஒத்துழைப்பு
இந்தியாவுடனான எங்களது பாதுகாப்பு ஒத்துழைப்பு அதிகரித்துள்ளது. இந்த உறவானது, 21ம் நூற்றாண்டில், அமெரிக்காவிற்கு முக்கியமானது. கடந்த நவம்பர் மாதம், இந்தியாவுடன் இணைந்து முதல்முறையாக கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டோம்.
இந்திய கடலில், இந்திய கடற்படையுடன், அமெரிக்க கடற்படை கப்பல் இணைந்து பயிற்சியில் ஈடுபடுவது, வலிமையான கடற்படை ஒத்துழைப்பிற்கு எங்களது உறுதித்தன்மையை எடுத்துகாட்டுகிறது. இந்தோ பசுபிக் பகுதி சுதந்திரமானது என்பதற்கு ஆதரவு தெரிவிக்கிறது.
சீன பிரச்சினை
இந்தியா சீனா இடையில் நிலவும் சூழ்நிலை, எல்லை கட்டுப்பாட்டில் நடந்ததை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். பதற்ற நிலையை குறைக்க வேண்டும் என இரு நாடுகளையும் கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு மாஸ்க் டி எஸ்பர் கூறினார்.